எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கான்பெரா, செப்.1 ஆஸ்திரே லியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த நூற்றுக்கணக்கான அகதிகள் மனுஸ் தீவில் அமைந் திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட் டுள்ளனர். இவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு மறுத்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே இந்த அகதிகளை மீள்குடியமர்த்துவதற் கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப் படையில், தற்போது 13 அகதிகள் அமெரிக்காவுக்கு பயணமாகியுள் ளனர். இதில் 2 ஈழத்தமிழ் அகதிகள், 2 பாகிஸ்தானியர்கள், 5 ஆப்கானியர்கள், மியான்மரைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 13 பேர் அமெரிக்காவில் மீள்குடி யமர்த்தப்பட இருக்கின்றனர்.

அதே சமயம் ஈரான், சோமா லியா, சூடான் உள்ளிட்ட நாடு களின் அகதிகள் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளதால் அந்நாட்டு அகதிகள் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவர்கள் கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார் அகதிகள் நல வழக்குரைஞர் அய்ன் ரிண்டோல்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப் பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக் காவில் நிரந்தரமாக குடியமர்த் தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதி களை ஆஸ்திரேலியாவில் குடிய மர்த்தவும் வழிவகைச் செய்கின் றது. இது ஒரே முறை நடை முறைப்படுத்தப்படும் ஒப்பந்த மாக கையெழுத்தானது.

2013ஆம் ஆண்டு முதல் கடு மையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலி யாவில் தஞ்சமடைய முயற்சிப் பவர்களை முழுமையாக நிரா கரித்து வருகின்றது.

2013ஆம் ஆண்டுக்கு முன்னர்  படகு வழியே வந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதி கள் நவுரு மற்றும் மனுஸ்தீவு தடுப்பு முகாம்களில் இன்றும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா எல்லைக் குள் நுழைந்த வியாட்நாம் படகிலிருந்த தஞ்சக்கோரிக்கை யாளர்கள் வியாட்நாமுக்கே நாடு கடத்தியதன் மூலம் ஆஸ்தி ரேலியா தன்னுடைய கடுமை யான எல்லைக் கொள்கையை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதை சுட்டிக் காட்டியிருக்கின்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner