எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யாழ்ப்பாணம், செப்.1 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, உள்நாட்டுப் போரில் காணாமல் போன வர்களை நினைவுகூரும் வகையில் இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனஈர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆகஸ்ட் 30ஆம் தேதியை சர்வதேச காணாமல் ஆக்கப் பட்டோர் தினமாக அய்.நா அறிவித்துள்ளது.

இலங்கையில் 1983 முதல் 2009 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக அய்.நா மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் இலங்கை அரசையும், தமிழர்கள் படுகொலையையும் தீவிரமாக எதிர்த்து கருத்துகளை வெளியிட்ட செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி ராணுவத்திடம் சரணடைந்த பலரும் இலங்கை யில் இவ்வாறு காணாமல் ஆக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அவர்களது உறவினர்கள் இலங்கை யில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளி நொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தினர். தலைநகர் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கவனஈர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள், “காணா மல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தை, கணவன், உறவினர்கள் உயிரு டன் இருக்கிறார்களா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமை யான பட்டியலை வெளியிட வேண் டும், எங்கள் உறவினர்களுடன் நாங்கள் வாழும் உரிமையை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்“ என்று வலியுறுத்தினர்.

மேலும் காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய சர்வதேச நாடுகளின் விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளையும் கையில் ஏந்தி யிருந்தனர். இதில் குறிப்பாக போர்க் காலத்தில் கடத்தப்பட்டும், காணா மல் ஆக்கப்பட்டவர்களின் உறவி னர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஆயிரக்கணக்கில் கூடி நினைவு கூர்ந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உள்நாட்டுப் போரில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner