எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப்.1 தங்களுக்கு எதிராக வட கொரியாவை சீனா தூண்டி விடுவதாக அமெரிக்க அதிபர் டொ னால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையே எழுந் துள்ள வர்த்தகப் பதற்றத்தை மனதில் கொண்டு சீனா இவ்வாறு செயல்படு வதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  அமெரிக்காவுடன் தற்போது நீடித்து வரும் வர்த்தகப் பதற்றத்தை மனதில் கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும்படி வட கொரியாவுக்கு சீனா கடும் நிர்பந்தம் கொடுத்து வருவதாக அதிபர் டிரம்ப் உறுதியாக நம்புகிறார்.

அதுமட்டுமின்றி, பணம், எரிபொருள், உரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வட கொரியாவுக்கு சீனா வாரி வழங்கி வருகிறது. எனினும், இதுபோன்ற உத்தி கள் பலனளிக்கப்போவதில்லை.

இத்தனைக்கும் இடையிலும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உனுடனான உறவு நல்ல முறையிலும், சுமூகமான தாகவுமே உள்ளதாக அதிபர் டிரம்ப் நம்புகிறார். அதனால்தான், வட கொரியா வுக்குப் பிடிக்காத அமெரிக்க - தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தி, வீண் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப் பட்டது.

எனினும், அதிபர் விரும்பினால் தென் கொரியாவுடனும், ஜப்பானுடன் இணைந்து எப்போது வேண்டுமானாலும் கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக் காவால் மேற்கொள்ள முடியும். அவ்வாறு பயிற்சி நடைபெற்றால், அந்தப் பயிற்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமானதாக இருக்கும்.

சீனாவுடனான வர்த்தகப்  பதற்றம் மற்றும் பிற கருத்து வேறுபாடுகளுக்கு அந்த நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் இணைந்து நிச்சயம் தீர்வு காண்போம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுவாகவே உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற குற்றசாட்டு

வட கொரியாவை சீனா நிர்பந்திப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளது, உண்மை களைத் திரித்துக் கூறுவதிலும், பொறுப் பற்ற, அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதிலும் உலகிலேயே அமெரிக் காதான் மிகச் சிறந்த நாடு என்ற எண் ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த விவகாரம் குறித்து டிரம்ப் கூறியுள்ள கருத்தை யாரும் அவ்வளவு எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது என்றார் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner