எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.1 தமிழ்நாடு காவல்துறையில் 202 உதவி ஆய்வாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பதவிக்கான தேர்வுக்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 1.7.2018 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண் டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இசுலா மியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், சீர்மரபினருக்கு 30 வயது, ஆதி திராவிடர், அதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினருக்கு 33 வயது, ஆதரவற்ற விதவை 35 வயது, முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப் படையினர்(பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்) 45 வயது, 20 சதவீதம் காவல் துறையின ருக்கான ஒதுக்கீடு விண்ணப்பதாரர் (29.8.2018 அன்று 5வருடங்கள் காவல் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டம்) 45 வயது.

விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதி யாக பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்திலிருந்த 10+2+3 என்ற முறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் 202, ஊதிய விகிதம் 36,900-116600.

தேர்வு கட்டணம் ரூ.500. பொதுப் பிரிவு மற்றும் துறை தேர்வு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.1000 செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி மூலம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுமய்ய விவரங்கள் இக்குழுமம் வழங்கும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் பின்னர் அறிவிக்கப்படும்.

இணையதள விண்ணப்பம் பதி வேற்றம் துவங்கும் நாள் 29.8.2018, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிப் பதற்கான கடைசி நாள் 28.9.2018. எழுத்து தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப் படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner