எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கயம், செப்.1- கிறிஸ்தவ அறக் கட்டளை கட்டிடம் உடைக்கப்பட்டு- தீ வைக்கப்பட்ட  சம்பவம் சங்-பரிவாரின் கைவரிசையா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் வட் டம், பாப்பினி கிராமம், வரதப்பம் பாளையத்தில் ஜீசஸ் கம்போர்ட்ஸ் யூ டிரஸ்ட் என்ற சென்னையைச் சார்ந்த கிறிஸ்தவ  அறக்கட்டளைக்குச் சொந்த மான காலி இடத்துடன் கூடிய கட்டடம் உள்ளது. இதை சாமிநாதன் என்பவர் பராமரித்து வருகிறார்.இந்த அறக்கட்டளை வளாகத்திற்குள் கடந்த 11,12 தேதிகளில்  அறக்கட்டளை ஆண்டுவிழா  நடைபெற் றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒலிபெருக்கி அனுமதி பெறாமல் நடைபெறுவதாகக் கூறி காங்கயம் காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் கடந்த 1 ஆம் தேதியன்று இங்கு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி தொடர்பான சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.  அறக்கட்ட ளையைச் சார்ந்தவர்கள் ஒலிபெருக்கி அனு மதிகோரி விண்ணப்பம் அளித்ததன்பேரில் காவல்துறையினர் பறிமுதல் செய்த ஒலி பெருக்கி சாதனங்களை திருப்பித்தந்துள்ளனர். அதன் பிறகு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி நடைபெற்ற இரு நாட்களிலும் காவல்துறையினர் வந்து ஒலிபெருக்கி ஓசை அதிக அளவில் உள்ளதாக தங்களுக்கு புகார்கள் வருவதால் ஒலிபெருக்கியின் அளவை குறைக்கவேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். ஒலி பெருக்கி ஓசை அதிகமாக வருகிறது என்று புகார் அளிப்பதற்கு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகில் சற்று தொலைவிற்கு வீடுகளே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கட்டடம் உடைப்பு-தீவைப்பு

கடந்த 11,12 ஆகிய தேதிகளில் நிகழ்ச் சிகள் நிறைவுபெற்ற பின்  கடந்த 18 ஆம் தேதி சனிக்கிழமையன்று இந்தக் கட்டடத் தில் பராமரிப்புப் பணி நடைபெற்றுள்ளது. அதன்பின் கடந்த 25.8.2018 சனிக்கிழமை காலை அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் வழக்கம்போல் கட்டடத்தை திறக்க வந் துள்ளனர்.அப்போது கட்டடத்தின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள் ளது.கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்த போது மின்சார அளவீடு பெட்டி மற்றும் பாய் விரிப்புகள் எரிக்கப்பட்டும், உள்ளே வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு,இசைக் கருவிகள் மற்றும் ஆழ்குழாய், மின்சாதனம் போன்றவைகள் உடைக்கப்பட்டிருந்தன.

புகார்

இதுகுறித்து அறக்கட்டளை கட்டட பராமரிப்பாளர் சாமிநாதன் 25.8.2018 அன்று காங்கயம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். கடந்த 11,12 தேதிகளில் நாங்கள் நிகழ்ச்சி நடத்தியபோது ஒலிபெருக்கி ஓசை அதிகமாக இருப்பதாக எங்களுக்கு புகார் வருகிறது என்று கூறினீர்களே ! அப்புகார் அளித்த நபர்களை விசாரித்தால் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடலாம் என்று சாமிநாதன் தரப்பினர் காவல்துறையிடம் கூறியுள்ளனர்..இது தொடர்பாக காங்கயம் ஆய்வாளர் முருகேசனுக்கும், புகார்தாரர் சாமிநாதன் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.காவல் துறையினர் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.இது தொடர்பாக புகார்தாரர் தரப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதையொட்டி புகார் பெறப் பட்டுள்ளது. 27.08.2018 அன்று இப்புகாரை யொட்டி காவல்துறையினர்  புகார்மனு ஏற்புச்சான்று கொடுத்துள்ளனர், அதில் காவல்துறை குறித்து புகாரில் தெரிவிக் கப்பட்ட செய்திகள் மறைக்கப்பட் டுள்ளது. மேலும் கடந்த 11,12 தேதிகளில் கிறிஸ்துவ அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி ஓசை அதிகமாக உள்ளது என்று யாரும் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்றும், யாரோ புகார் அளித்ததாக காங்கயம் காவல் ஆய்வாளர் முருகேசன் கூறியது பொய் என்றும், ஆய்வாளர் இப்படி கூறியதற்குக் காரணம் சிறுபான்மையினர் மீதான விரோதப் போக்கே காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவல்துறை சங்-பரிவாரின் கைக்கூலியா?

மேலும் காங்கயம் பகுதியில் கடந்த இரண்டாண்டுகளாக சிறுபான்மையினர் களாகிய கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், இருமுறை மாதா சிலை உடைப்பு, கிறிஸ்துவ வழிபாட்டுத் தலத்தில் மத மாற்றம் செய்யப்படுகிறதென்ற விஷமப் பிரச்சாரம், கிறிஸ்தவ வழி பாட்டுத் தலங்களில் ரகளை ஆகிய  பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கின்ற செயல்களை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண் டிருக்கின்ற விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி,பஜ்ரங்தள் ஆகிய மத அமைப்புகளைச் சார்ந்த வர்கள் மீது காங்கேயம் காவல் துறை ஆய்வாளர் முருகேசன் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை! தற்போது நடைபெற்ற நிகழ்ச்சி தொடர் பாகவும் இல்லாததை இருப் பதாகச் சித்தரித்துள்ளார்! இத னால் காங்கயம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் சங்-பரிவார் கும்பல்களின் கைக்கூலியாகச் செயல்படுகிறாரோ? என்ற அய்யப்பாடு காங்கயம் பகுதி மக்களிடையே நிலவு கிறது.

தீவிர விசாரணை

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவில் போராட்டம்

காங்கயம் பகுதிகளில் சங்பரிவார் கும்பல்களாலும், காவல்துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளாலும் சிறுபான் மையர்கள் மீதான விரோதப்போக்குகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் இதை வெகுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் சமூகநீதியில் அக்கரை கொண்ட அரசியல் கட்சிகள்,பொதுநல அமைப்புகள் சார்பாக விரைவில் போராட்டம் நடை பெறும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner