எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இந்து மகாசபா, மாட்டிறைச்சி தின்பவர்கள் அதிகம் இருக்கும் கேரளாவிற்கு உதவிகள் வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது.

கேரளாவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக முழுமையான மாநிலமே பாதிக்கப்பட்டுள்ளது, இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தற்போது பெருமளவில் நிதிஉதவிகள் தேவைப்படுகிறது, மாநில அரசும் வெள்ளச்சேத குறித்து கணகெடுப்பை நடத்தில் ரூ20,000 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூறி யுள்ளது, மேலும் உடனடியாக ரூ 2000 கோடி வேண்டும் என்று கூறியுள்ளது, ஆனால் மோடி அரசோ வெறும் 600 கோடியை வழங்கிவிட்டு அடுத்த நிதி எப்போது என்று கூறாமல் இருந்து விட்டது.  இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அமைப்புகள், தனியார்களும் பெருமளவில் நிதிதிரட்டி வருகின்றனர். இவ்வாறு நிதி திரட்ட சமூக ஆர்வலர் களாலும் இதர அமைப்புகளாலும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்துமகாசபை கேரளாவிற்கு உதவிகள் வழங்கக்கூடாது என்று சுற்ற றிக்கை விட்டுள்ளது.

அதன் தலைவர் சக்ரபாணி கூறிய தாவது: கேரளமக்கள் மாட்டிறைச்சியை உண்பவர்கள் -  அவர்கள் பாவத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உதவுவது அவர்கள் செய்த பாவத்தைப் பங்கு போட்டுக்கொள்வதற்குச் சமமாகும். ஆகவே யாரும் கேரளமக்களுக்கு உதவவேண்டாம். உண்மையில் இந்துமத விதிகளில் நம்பிக்கை வைக்ககூடிய யாவரும் அவர்களுக்கு உதவமாட்டார்கள். அதே போல் இவ்விவகாரம் தெரியாதவர்கள் தற்போது எங்களின் கோரிக்கைகளை ஏற்று அவர் களுக்கு உதவுவதையோ உதவுவதை ஊக்குவிப்பதையோ நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அயல்நாட்டு நிதிவழங்குதல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜூவ் மல்ஹோத்திராவும் கேரளாவில் உள்ள இந்துக்களுக்கு(பார்ப்பனர்களுக்கு) மட்டுமே உதவும் வகையில் நிதியை கவனமாக வழங்கவேண்டும் அப்படி முடியாவிட்டால் நிதியை வழங்காமல் இருப்பது நல்லது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்துமகா சபையும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்துத்துவ வெறி என்பது எந்த அளவிற்கு இரக்கமில்லாதது என்பதற்கு இவர்களின் எண்ணக்கருத்துக்கள் மிகப்பெரிய எடுத்துக் காட்டு ஆகும். இவர்களின் மன நிலையில் தான் பாஜக அமைச்சர்களும் அவர்களை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் உள்ளது, அவர்களால் வெளிப் படையாக பேசமுடியாதநிலையில் மோடி மற்றும் அமைச்சர்களின் குரலாக இந்துமகா சபையினரும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களும் பேசிவருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner