எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1918-ஆம் ஆண்டு முதல் முதலாக இந்து என்ற சொல் பதிவேடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது .

இந்தியா முழுவதும் முகலாயர் ஆட்சி வந்த பிறகு பிறந்த பிரபல வடமொழிக் கவிஞர் துளசிதாஸ்  ராம்மானஸ்சரித்திரா என்ற இராமாயணத்தை எழுதினார். எந்த ஒரு பக்கத்திலும் முகலாயர்கள் பற்றியோ அவர்களுக்கு முன்பு இன்று இந்துத்துவ அமைப்பினர் கூறும் கோவில்களை தொடர்ந்து இடித்த சுல்தான்கள் பற்றியோ எந்த ஒரு இடத்திலும் எழுதவில்லை, தன்னுடைய ராமாயணத்தில் பல இடத்தில் அன்றைய (முகமதியர்) ஆட்சியை  மறைமுகமாக பாராட்டியே எழுதியுள்ளார். பாபரால் ராமர் கோவில் இடிக்கப்பட்டது என்று கூறப்படும் காலம் துளசிதாஸ் காலம் ஆனால் துளசிதாஸ் தன்னுடைய பல கவிதைகளில் எந்த ஓரிடத்திலும் ராமர்கோவில் பற்றியோ பாபர் அதை இடித்தது பற்றியோ குறிப்பிடவில்லை.

அவர் மட்டுமல்ல; முகலாயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த பல கவிஞர்கள், முகலாயர்கள் பற்றியோ அவர்கள் பிற மதத்தவர்களுக்கு எதிராக நடந்தது குறித்தோ எழுதவில்லை.  துளசி தாஸ் இசுலாமியர்கள் குறித்து எழுதியதாக வந்த சில கவிதை வரிகள், பிற்காலத்தில் சிலரால் சேர்க்கப் பட்டவை என்று சான்றுகளோடு உறுதி செய்யப்பட்டு விட்டது. அதாவது அப்போது இந்துமதம் என்று இல்லவே இல்லை. அன்று இருந்த மதம், பார்ப்பனர்கள் மட்டுமே பின்பற்றிவந்த வேதசமயமாகும். அவர்கள் முகலாயர்கள், சுல்தான்கள், இதர துருக்கிய ஷாக்கள்(துருக்கி சுல்தான்கள்) ஆட்சியின் போது அவர்களுடன் பார்ப் பனர்கள் இணக்கமான இருந்து தங்களின் தேவைகளை நிரப்பிக்கொண்டனர்.

இந்து என்ற பெயர் எப்படி வந்தது, அதாவது சமூகத்தில் பெரும்பாலானோருக்கு வாக்குரிமை கிடைக்கும் சட்டத்தை இங்கிலாந்து உருவாக்கியது. அது காலனி நாடுகளிலும் அமலில் வந்தது.

இதற்குத்தான் பாலகங்காதர திலகர் கூறினார், நிலக்கிழார்கள், வியாபாரிகள், கூலியாட்களை மேய்ப்பவர்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளு மன்றத்திற்குச் சென்றால் விவசாயத்தை யார் கவனிப்பார்கள்? எண்ணெயை யார் விற்பனை செய்வார்கள்? கூலியாட்களை யார் கண்காணிப்பார்கள்? என்று கூறி சுயராஜ்யம் எங்களுக்கானது எங்களின் பிறப்புரிமை (அதாவது பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஆன உரிமை என்று கூறினார்) அவர் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று கூறியது பார்ப்பனர்களுக்கான மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் வாக்குரிமை என்று வரும்போது பார்ப்பனர்களின் எண்ணிக்கை அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே ஆகும். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 2 விழுக்காடு உள்ளவர்களால் எப்படி பிழைக்க முடியும்? தங்கள் இனமே ஆபத்தில் இருப்ப தாகக் கருதிய பார்ப்பனர்கள் அன்றைய பிரபல மதங்களான கிறிஸ்தவம், இசுலாம், தவிர அனைத்தையும் தங்களின் கீழ் கொண்டு வர இந்து என்றப் பெயரை பயன்படுத்தினர்.

இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சீக்கியம், புத்தம், சமணம் (ஜைனம்) போன்றவை தங்களை இந்து அட்டவணை யிலிருந்து வெளியேற்றிக் கொண்டன, இருப் பினும் அவர்களுக்குக் கவலையில்லை, ஏனென்றால் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் அன்றைய மக்கள் தொகைக் கணக்குப்படி வெறும் 10 விழுக்காடு மட்டுமே இருந்தது, இன்று பார்ப்பன அடிமைகளில் அதிகம் உள்ளவர்கள் ஓபிசி எனப்படும் இதர, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களே, காரணம் இவர்கள் மக்கள் தொகையில் 57 விழுக்காடு உள்ளனர்.

இவர்களே பார்ப்பனர்கள், தங்களைப் பாது காத்துக்கொள்ள உருவாகிய இந்துமதத்தின் காவலாளிகளாகவும் மாறிவிட்டனர். தங்களது ஆதிக்கம் இருக்கவேண்டு மென்றால் இந்து, முசுலீம் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கவேண்டும், அதற் காக அவர்களாகவே உருவாக்கிக்கொண்ட பாகிஸ்தான் - இந்தியா பிரச்சினைகள் எப் போதும் அணையவிடாமல் பார்த்துக் கொள் வார்கள். நாட்டில் நடந்த மதக்கலவரம், உள்ளிட்ட எந்த கலவரத்திலும் பார்ப்பனர் களுக்கோ, பார்ப்பனர்கள் உள்ள பகுதி களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்ட தில்லை, அதே போல் அயல்நாடுகளில் பார்ப்பனர்கள் அங்குள்ள இசுலாமியர் மற்றும் கிறித்துவ மதத்தினருடன் தங்களின் தேவைக்காக நட்புகொண்டு பிழைப்பு நடத்துவார்கள். ஆனால் உள்ளூரில் மதவெறுப்பால் பார்ப்பனரல்லாதோர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு  வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner