எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உன்னாவோ கற்பழிப்பு வழக்கில் சிக்கிய குல்தீப்சிங் செங்காரைக் காப்பாற்ற முயற்சித்த பாஜக எம்எல்ஏ சுரேந்திராசிங், “ராமனாலும் வல்லுறவுகளைத் தடுக்க முடியாது!” எனப் பேசி சர்ச்சைத் திரியைக் கிள்ளியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் பைரியா பஸ்தி தொகுதி எம்எல்ஏவான சுரேந்திராசிங், “சமூகத்தில் தடம் புரளும் நிகழ்வுகளால் கற்பழிப்புகள் நிகழ்கின்றன.

கடவுளான ராமனே வந்தாலும் இதனைத் தடுக்க முடியாது. இது மக்களின் குணங்களைப் பொறுத்தது. அரசுக்கு தொடர்பில்லை...” என பேட்டியளித்து பிரபலமாகியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வல்லுறவு தொடர்பான புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

சுரேந்திராசிங் இதற்கு முன்பும் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்றும், காங்கிரசை கவுரவர்கள் என்று கிண்டலாகவும், நரேந்திர மோடியை அர்ஜூனன் என்றும் புகழ்ந்து பேசியவர்!

நன்றி: குமுதம், 20.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner