எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அருப்புக்கோட்டை பெரியார் பெருந் தொண்டர் மானமிகு தங்கசாமி அவர்கள் 91 வயதுள்ள பெரியார் பெருந்தொண்டர் ஆவார்.

பெற்றோர்கள்: அமிர்தம்மாள்

அரசகுமார் (ஆசிரியர்).

துணைவியார்: ராஜம்- திராவிடர் கழக மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர்.

பிள்ளைகள்: 5 (3 மகன்கள், 2 மகள்கள்).

இவர் பிறந்த ஊர் கல்லூரணி - அவ்வூர் சுயமரியாதை இயக்க  திராவிடர் கழகக் கோட்டை - தராசு சின்னம் அணிந்த வேட்டியை கட்டிக் கொள்வார்கள்.

அத்தகு ஊரில் 10 வயதிலேயே தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். மரங்களில் கொடிகளைக் கட்டுவார்களாம்.

பொது சுகாதாரத்துறையில் பூச்சியியல் வல்லுநராகப் (ணிழிஜிளிவிளிலிளிநிசீ) பணியாற் றினார். கொசுக்களால் பரவும் வியாதி களைப் பற்றிய  துறை - கட்டுப்படுத்தும் துறை.

தஞ்சாவூரில் நீண்டகாலம் பணியாற்றி யுள்ளார். ‘விடுதலை’ வாசகர் ஆனதால் அதில் வரும் தந்தை பெரியாரின் சுற்றுப் பயணம் பார்த்து அதற்கேற்றாற்போல அரசு பணி சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார்.

முக்கியமான நிகழ்வுகளுக்கு மனைவி, குழந்தைகளையும் அழைத்துப் போவார்.

பேரப்பிள்ளைகள் முதல் அனைவரும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்ட றையில் பயிற்சி பெற்றவர்கள். (இவ்வனை வரும் - மகன்கள், மருமகள்கள், மகள்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் குடும்பத் தோடு கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் நான்கு நாள்கள் தங்கி குற்றாலப் பயிற்சியில் பங்கு பெற்றனர்.)

இவரின் திருமணத்தின் போது மண மக்கள் சாரட்டில் அழைத்து செல்லப்பட்ட னர். மாரியம்மன் கோயில் வழியாக செல்லும் போது, மணமக்கள் அங்கு இறங்கி கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டும். ஆனால் மணமகனான இவரோ அவ்வாறு செல்லவில்லை.

மனைவி பக்தி உடையவர் என்றாலும் இவர் வற்புறுத்தவில்லை; இயக்க நூல்களை படித்து திருந்தினார். ‘உண்மை’ இதழில் சிறுகதை எழுதும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தார் - இப்பொழுது மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

இவரின் சமூக சேவையின் சிறப்பை உணர்ந்து  மக்கள் நீதி உறுப்பினராக அரசே  நியமித்துள்ளது. நீதிபதிக் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர் மதுரை சிறைச்சாலையில் 15 நாள் இருந்தார். சிறையில் திராவிடர் கழகத் தோழர்கள் நடந்து கொண்ட நன்னடத்தையைப் பார்த்து வார்டனே பாராட்டியிருக்கிறார்.

இவரது வாழ்விணையர் ராஜம் அம்மாள் தலைமையில் அனைத்து ஜாதியினருக்கும் அரச்சகர் உரிமைப் போராட்டம் சிறீவில்லிப் புத்தூர் ஆண்டாள் கோயில் முன் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தைபெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் தலைமையில்  கழகம் நடந்து வந்த மூன்று நிலைகளையும் அறிந்த இந்தப் பெரியார் பெருந்தொண்டர், இப்பொழுது  இயக்கத்தில் இளைஞர்களும் மாணவர் களும் பெரும் அளவில் திரள்வது நம்பிக் கையளிப்பதாகப் பெருமிதத்துடன் குறிப் பிடுகிறார்.

கடந்த ஆண்டு ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பங் கேற்று அய்ரோப்பாவின் பலநாடுகளுக்கும் சென்று வந்தவர்.

பேரப்பிள்ளைகள் உட்பட அய்யா கொள்கை வழியாகவும், இயக்க ரீதியாகவும் இருப்பது கண்டு பெருமைப்படுவது நியாயம் தானே. (பேட்டி: குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் போது - 5.8.2018) கலி.பூங்குன்றன் - உடன்: விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner