எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாக்பத், செப்.2 -திறந்த வெளியில் மலம் கழித்தால் மரண தண்டனை விதிக்கப் படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பாக்பத் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்தது, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிரதமர் மோடி யின் ‘தூய்மை இந்தியா’ திட் டத்தை தீவிரமாக செயல்படுத்த அம்மாநில அரசு உத்தர விட் டுள்ளது.

இதையொட்டி, மீரட் அரு கேயுள்ள பாக்பத் நகராட்சியில், அனைத்துப் பகுதி களிலும் கழிப்பறைகள் அமைக்கப் பட்டு, ‘திறந்தவெளி கழிப் பறை இல்லா நகரம்’ என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, பாக்பத் நகராட்சி நிர்வாகம், திடீரென ‘திறந்தவெளிகளில் மலம் கழிப்போருக்கு மரண தண் டனை விதிக்கப்படும்’ என்று நகர் முழுவதும் அறிவிப்பு பலகைகளை வைத்தது, அந்தப்பகுதி பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், நகராட்சி யின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்கிறது.ஆனால், பாஜக-வினர் வழக்கம்போல தங்களுக் கும் இந்த பெயர்ப்பலகைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளனர். ஒருபடி மேலே போய், ‘மோடி அரசின் நற் பெயருக்கு களங்கம் விளை விக்க யாரோ இவ்வாறு செய் துள்ளனர்’ என்றும் மழுப்பியுள் ளனர். தற்போது அந்த அறி விப்பு பலகைகள் அகற்றப்பட் டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner