எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.2  சென்னை டிபிஅய் வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (எஸ்சிஇஆர்டி) புதிய பாடத்திட்டம், பாடநூல்களை உருவாக்குவதற் காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடுத்த கல்வி யாண்டுக்கான புதிய பாடத் திட்ட நூல்கள் தயாரித் தல், பணிகளின் முன்னேற்றம் சார்ந்து ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து க.அறிவொளி கூறியது:  புதிய பாடத்திட்டத்தின்படி, முதல்கட்டமாக வெளியிடப் பட்ட பாடநூல்களை மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்றுவிப்பதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2.25 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பாடநூல்களைத் தாண்டியும் மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் நோக்கத்தில் பாடப் பகுதிகள் காணொலி வகுப்புகளாகவும், இணைய வளங் களாகவும் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடங்களை மின்னியல் காட்சிகளாக உருவாக்கும் பணியில் ஆசிரியர்களும் மாணவர்களும் சிறந்த முறையில் பங்காற்றியுள்ளனர். ஒவ்வொரு பாட நூலும் ஆண்டு தோறும் ஆய்வு செய்யப்பட்டு தேவைக் கேற்ப உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner