எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கன்னியாகுமரி, செப். 2- குமரியில் திக்குறிச்சி மகாதேவர் கோயி லில் 5 கடவுளர் சிலைகள், நவரத்தின கற்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பன்னாட்டு மதிப்பில் இவை ரூ.2 கோடிக்கு மேல் மதிப்பு டையவை என புகார் கூறப் பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத் தில் 12 சிவன் கோயில்களில் ஒன்றாக மார்த்தாண்டத்தை அடுத்துள்ள திக்குறிச்சி மகா தேவர் கோயில் இருக்கிறது. இக்கோயில் திருவிதாங்கூர் மன் னர்களால் பராமரிக்கப்பட்டு, தற்போது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக் கோயிலில் தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்கள் கொண்ட புதையல் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி இங்குகண்காணிப்பு கேமரா நிறுவ வேண்டும் என இந்து அறநிலையத்துறை அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். குழித்துறை தாமிரப ரணி ஆற்றின்கரையில் உள்ள இக்கோயிலுக்கு அருகே  கட்ட டங்கள் மற்றும் வீடுகள் ஏது மில்லை. இரவில் ஆள்நட மாட்டம் இருக்காதாம்.

இக்கோயில் பூசாரி கிருஷ் ணமூர்த்தி தலைமையிலான அர்ச்சகர்கள் 1.9.2018 அன்று  காலை கோயிலுக்கு வந்த போது,  கோயில் முன்பக்கம் மற்றும் உள்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந் தன. இதுகுறித்து, அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள் ளையடிக்கப்பட்டிருந்தது. மூலஸ்தான கதவு உடைக்கப் பட்டு, அங்கு பாதுகாப்பு அறையில் இருந்த நகைகள், அய்ம்பொன் சிலைகள் திரு டப்பட்டிருந்தன. 3 கிலோ மற்றும் 2.5 கிலோ எடை கொண்ட 2 அய்ம்பொன் சிவன் சிலைகள், 4 கிலோ எடை கொண்ட விநாயகர் அய்ம் பொன் சிலை, 4 கிலோ எடைகொண்ட முருகன் அய்ம் பொன் சிலை, செம்பால் ஆன நந்தி சிலை ஆகிய 5 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள் ளன.

மேலும், மூலவர் மகாதேவ சிலைக்கு அணிவிக்கப்படும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட திருமுகம், வெள்ளி திருமுகம், செம்பு திருமுகம், ஆராட்டு வெள்ளிக்குடை, தங்க மாலை கள், தங்க பொட்டு போன்ற பழங்கால நகைகள் கொள் ளையடிக்கப்பட்டுள்ளன.

ரூ.25 லட்சம் மதிப்பிலான கடவுளர் சிலைகள், நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போயுள்ளதாக கோயில் நிர் வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பன்னாட்டு சந் தையில் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட் டுள்ளது.

தக்கலை காவல்துறை துணை கண்காணிப்பாளர்  தலைமை யில் காவல்துறையினர் விசா ரணை நடத்தினர். மோப்பநாய் ஓரா உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறை கண் காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner