எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.2 திமுக மாவட்டச் செயலாளர்கள்,  நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக மாவட்டச் செயலாளர்கள்,  நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறும். கூட்டத்துக்குக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கட்சியின் ஆக்கப் பணி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார். கலைஞரின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

அதன்படி மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில்,  அது குறித்து மாவட்டச் செயலா ளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவுகள் பிறப்பிக்கவுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner