எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.2-  தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் நீக்கப் பட்டுள்ளனர். இதனால், வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாக உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டனர். இந்த வரைவு வாக்காளர் பட் டியலில் 5 லட்சம் வாக்காளர் களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.

இந்த நீக்கத்துக்கான கார ணங்கள் குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வாக்காளர் பட்டியலில் இரு இடப் பதிவினை நீக்க தேர்தல் ஆணையம் தீவிர நட வடிக்கை மேற்கொண்டது. இதற்காக, இருப்பிடங்களில் இல்லாதவர்கள், இடம் மாறி யவர்கள், இறந்தவர்களின் பட் டியல் விரிவாக எடுக்கப்பட் டது. இந்தப் பட்டியல்களில் இடம்பெற்றிருந்தோரின் பெயர்கள் பல முறை முழுமை யாக ஆய்வு செய்யப்பட்டன.

குறிப்பாக, இருப்பிடங்க ளில் இல்லாதோரின் விவரங் களை நேரடி களஆய்வின் மூல மாகவும், இறந்தோரின் விவ ரங்கள் இறப்புச் சான்றிதழ் வழியாகவும் உறுதி செய்யப் பட்டது. எனவே, இரு இடப் பதிவு கொண்ட வாக்காளர்க ளின் பெயர்களே பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளன. இதனால், எந்தப் பிரச்னைகளும் எழ வாய்ப்பில்லை என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.


திமுக விருதுகள் அறிவிப்பு

சென்னை, செப். 2- திமுக சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழாவையொட்டி தலைவர்கள் பெயரால் அளிக்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 15-ஆம் தேதி விழுப்புரம் அண்ணா திடலில் நடைபெற உள்ளது.

பெரியார் விருது மும்பை வி.தேவதாசனுக்கும்,  அண்ணா விருது பொன்.ராமகிருஷ்ணனுக்கும்,  கலைஞர் விருது குத் தாலம் பி.கல்யாணத்துக்கும்,  பாரதிதாசன் விருது இந்திர குமாரிக்கும்,  பேராசிரியர் விருது மா.செங்குட்டுவனுக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner