எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 2- விண்வெளி யில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத்தின் மீது மோதியது.

இந்த மோதலினால் விண் வெளி ஆய்வு மய்யத்தில் சிறு துளை உருவானது. இதனை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதனை முதற் கட்டமாக அடைத்துவிட்டு, தற்போது முழுமையாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த துளை கண்டறியப்பட்டவுடன், விண்வெளி வீரர் அலெக்ஸ் தனது விரல் மூலம் அந்த துளையை அடைத்தபடி, அடுத்தகட்ட பணியை செய்ய சக வீரர்களிடம் கோரியுள்ளார்.

2 மி.மீ அளவில் ஏற்பட்ட துளை கவனிக்காமல் விடப் பட்டிருந்தால் 18 நாட்களில் ஆராய்ச்சி மய்யத்தில் இருந்த காற்று வெளியேறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசியாவின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் ரசியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் துளையை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஹெச்1பி’ விசா கொள்கையில் மாற்றம் இல்லை: அமெரிக்க உயரதிகாரி தகவல்

வாசிங்டன், செப். 2- ஹெச்1பி’ விசா வழங்கும் கொள்கையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

அமெரிக்கப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், ஹெச்1பி’ விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. ஆனால், இது தொடர்பாக எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

ஹெச்1பி’ விசா வழங்கும் கொள்கைகளிலும் எந்த மாற்ற மும் மேற்கொள்ளப் படவில்லை என்று அந்த அமெரிக்க உயரதிகாரி தெரிவித்தார்.

பல்வேறு இந்தியப் பணியாளர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவதாக, தனியார் நிறுவனம் ஒன்று கடந்த ஜூலை மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி டில்லியில் நடைபெறவுள்ள, இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில், விசா விவகாரம் தொடர் பாக விவாதிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner