எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.2  இந்திய செவிலியர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், அவர்களின் பணிகள் குறித்து ஜப்பான் நாட்டுக் குழுவினர் சென்னையில்  ஆய்வு நடத்தினர்.

இந்திய அரசும், ஜப்பான் அரசும் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள செவிலியர்களை ஜப்பானில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா சேவைகளில் ஈடுபடுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஜென்ஜி அயா தலைமையிலான குழுவினர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கலைஞர் நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர். செவிவியர்களின் சேவை எவ்வாறு உள்ளது, அவர்களின் பணி எத்தகையது என்பன உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடத் தையும் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜப்பான் குழுவினர் பேசும்போது,  2030-ஆம் ஆண்டில் அடைய வேண்டிய நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் மிகவும் புரட்சிகரமான திட்டமாகும். தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அனைத்து ஒத்துழைப்பையும் ஜப்பான் அரசு வழங்கும்‘ என்றனர் அவர்கள். சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ் ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆசிரியர் நியமன தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள்  தேர்வு எழுத வாழ்நாள் தடை ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை

சென்னை, செப்.2 ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக் கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர் கள் தேர்வெழுத வாழ்நாள் முழுவ தும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது. அதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது.

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வையும் அவ்வாரியமே நடத்துகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும், தகுதித்தேர்விலும் மதிப்பெண்ணில் திருத்தம் செய்து முறைகேடு நடந்திருப்பதை ஆசிரியர் தேர்வு வாரியமே ஆய்வு மூலம் கண்டுபிடித்தது.

விடைத்தாள்களை ஸ்கேன் செய்து மதிப்பெண் பதிவுசெய்யப் படும் நிலையில் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்துசெய்த தேர்வு வாரியம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித்தேர்வில் மதிப் பெண் முறைகேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்களின் தேர்ச்சியை ரத்து செய்துள்ளது. அவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்ப தாரர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையாக்கியுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வு களில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கும் வகையில் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர்

தெரிவித்தார்.

கருப்பு பட்டியலில்..

புதிய விதிமுறையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வில் மதிப்பெண்ணை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 200 விண்ணப்ப தாரர்கள் மீது முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாது. அவர்களின் பெயர், முகவரி, பிறந்த நாள், கல்வித்தகுதி, இடஒதுக் கீட்டுப்பிரிவு உட்பட அனைத்து விவரங்களும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே, அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சி செய் தால் அவர்களின் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும். தவறு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் விண்ணப் பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடை விதிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner