எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை செப்.2 நீட்’ விவ காரத்தில் மத்திய அரசின் நிலைப் பாடு தேசிய ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றஞ்சாட்டி னார்.

நீட் வினாத்தாள் தமிழ் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட பிழை களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்த டி.கே.ரங்க ராஜன் சென்னையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, தமிழகத்துக் கான நீட் வினாத் தாள்களில் தமிழ் மொழிபெயர்ப்பில் தவறு நடந்துள்ளது என்பதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நீட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு வாதிடும் போது, மொழிபெயர்ப்பில் எந்தத் தவறும் இல்லை. மருத்துவப் படிப்பு முழுவதும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. எனவே, ஆங்கி லத்தில் படித்தால்தான் மருத் துவப் படிப்பையும் எளிதாக மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு வரை பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்து விட்டு, மருத்துவம் படித்த தமிழகத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி வரு கின்றனர். பெரிய மருத்துவர்களாக வும் ஆகியிருக்கின்றனர். எனவே, ஆங்கிலம்தான் எல்லாம் என்றால், பிராந்திய மொழிகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, பிராந்திய மொழி களில் அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வுகளும் எழுத முடியாது என்ற நிலையும் உருவாகும். எனவே, இது கூட்டாட்சித் தத்து வத்துக்கு எதிரானது என்பதோடு, தேசிய ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த ஆண்டுக்கான மருத் துவப் படிப்பு சேர்க்கை முழுமை யாக நிறைவுபெற்றுவிட்டதால், இந்த விவகாரத்தில் இனி எதுவம் செய்ய இயலாது. எனவே, அடுத்த ஆண்டு இந்த குளறுபடி களைக் களைய என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி, வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 26- ஆம் தேதிக்கு ஒத்தி வைத் துள்ளது.

வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வரும்போது, வரும் காலங்களில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், என்ன செய்யவேண்டும் என்பதை ஆலோசித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வு கூடாது என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. அதையே உச்சநீதி மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனது வாக்குமூலமாக சமர்ப்பித் துள்ளது என்றார் டி.கே.ரங்க ராஜன்.

மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: நீட் தேர்வு மீண்டும் வந்தால் எவ்வளவு குளறுபடிகள் ஏற் படும். நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பால் தமிழ் வழியில் படித்த மாணவர்களின், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, நீட் தேர்வு அவசியமில்லை என்பதை யும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் அவசியம்தான் என்பதையும்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்றார் அவர்.


618 அரசு ஒதுக்கீட்டு  பி.டி.எஸ். காலியிடங்கள்

செப்.6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, செப்.2  இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர் தனியார் மருத்துவக் கல்லூரி களில் 618 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளதால், புதிதாக இந்த இடங்களுக்கு விண்ணப்பிக் கலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங் கள்,  தனியார் மருத்துவக் கல் லூரிகளில் உள்ள அரசு ஒதுக் கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று அனைத்து இடங்களும் நிரம்பின.

இந்நிலையில் பி.டிஎஸ்.  அரசு ஒதுக்கீட்டு இடங்களுக் கான கலந்தாய்வு ஆகஸ்ட் 29-ஆம் நிறைவு பெற்றது. கலந் தாய்வின் முடிவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 618 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் இந்த இடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண் ணப்பங் களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன்  வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவப் படிப்புக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு முன்பு வரை  விண்ணப்பிக்காதவர்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்காக இணையதளத்தில் விண்ணப்பங் களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ரூ.500-க்கான வரைவோலை எடுத்து பூர்த்தி செய்த விண் ணப்பத்துடனும், தேவையான சான்றுகளுடனும் விண்ணப் பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங் களை “தேர்வுக் குழு, மருத் துவக் கல்வி இயக்ககம், கீழ்ப் பாக்கம், சென்னை-10’ என்ற முகவரிக்கு தபாலிலோ நேரி லோ சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மருத் துவக் கல்வி இயக்ககத்துக்கு செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

இந்த இடங்களுக்கு விண் ணப்பிக்கும் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நீட் தேர்வில் 119க்கு குறைவாகவும், பிற பிற் படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் 96 மதிப்பெண்ணுக்கு குறைவாகவும் எடுத்திருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner