எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.3 'கலைஞரின் புகழுக்கு வணக்கம்' என்ற தலைப்பில் அரங்க கூட்டம் நடைபெறும் என்று திமுக

அறிவித்துள்ளது.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நினைவினைப் போற்றும் வகையில், தி.மு.க. சார்பில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பின் கீழ் அரங்க கூட்டங்கள் நடைபெறும்.

சேலம் மத்திய மாவட்டம் சார்பில் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு சேலம்  சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமணமண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி., எழுத்தாளர் சு.வெங்கடேசன், கவிஞர் நெல்லை ஜெயந்தா புகழ் வணக்கம் செலுத்துகின்றனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, பேராசிரியர் கவிஞர் அப்துல்காதர், கவிஞர் நந்தலாலாவும், நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாமக்கல் விடுதி நளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கவிஞர் மனுஷ்யபுத்திரன், புலவர் மா.இராமலிங்கமும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் ஏ.கே.ஜி.திருமண மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் அருணன், நடிகர் ராஜேஷ், தமிழச்சி தங்கபாண்டிய னும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு பெருந்துறை ஈரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, கம்பம் பெ.செல்வேந்திரன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளை தொடர்புடைய மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக நடத்திட வேண்டும்.  இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை செட்டியார் நினைவு பரிசுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னை, செப். 3- டாக்டர் மு.அ.மு. இராமசாமி செட்டியார் அறக் கட்டளையானது ஒவ்வொரு ஆண்டும் தமிழை, தமிழறிஞர்களை மேன்மைபடுத்தும் வகையில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இவ்வாண்டும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

50 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி, பல்கலைக் கழக பேரா சிரியர்கள் தங்கள் படைப்புகளைப் பற்றி நூல்கள் வெளியீடு, ஏதேனும் தமிழ் இலக்கியத்தில் தனித்திறமை பதித்த விவரங்கள் மற்றும் ஆய்வாளர் களை உருவாக்கிய விவரம் முதலியவற்றை விண்ணப்பத்தோடு இணைத்து 10.9.2018ஆம் தேதிக்குள் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: டாக்டர் மு.அ.மு. இராமசாமி செட்டியார் அறக்கட்டளை, எண்.82, சாந்தோம் நெடுஞ்சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028. னீணீனீtக்ஷீust@ரீனீணீவீறீ.நீஷீனீ

முத்தையா செட்டியார் நினைவு பரிசுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னை, செப். 3- டாக்டர் மு.அ.மு. இராமசாமி செட்டியார் அறக்கட்டளையானது ஆதரவற்றோர், குழந்தைகள், முதியவர் காப்பகத்தை மிக சிறந்த முறையில் நடத்தி வருபவருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தொண்டினைப் பாராட்டி, உற்சாகப்படுத்தும் வகையில் பரிசுத் தொகை மற்றும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இவ்வாண்டும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களைப் பற்றிய நடத்தும் காப்பகம் பற்றிய (செயல்படும் விதம், சேவைகள், எண்ணிக்கை) முழு தகவல்களையும், இதற்கு முன் பெற்ற அங்கீகாரங்களையும் இணைத்து 10.9.2018ஆம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: டாக்டர் மு.அ.மு. இராமசாமி செட்டியார் அறக்கட்டளை, எண்.82, சாந்தோம் நெடுஞ்சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028. This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner