எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.3 லஞ்சம் மற்றும் வரி ஏய்ப்புப் புகார் களில் சிக்கி உள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு வருமான வரித் துறை கடிதம் அனுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜயபாஸ்கரின் அலுவ லகம், புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர் களுக்கு 89 கோடி ரூபாய் பட் டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட் டன. விஜயபாஸ்கரின் உதவி யாளர் மற்றும் உறவினர் களிடமிருந்து 20 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் மற்றும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் செவிலியர் கல்லூரி களிடம் இருந்து கோடிக் கணக்கில் லஞ்சம் பெறப் பட்டதும் தெரியவந்தது.  புதுக் கோட்டை அடுத்த இலுப்பூரில் விஜய பாஸ்கரின் தந்தை நடத்தி வந்த குவாரியில் அனுமதிக் கப்பட்டதை விட பல மடங்கு அதிகமான கல் உடைக்கப்பட்டுள்ளதையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும் அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது தந்தை சின்னதம்பி ஆகியோர் பல கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த விவரங்களை வருமான வரித்துறையினர் தமிழக அரசுக்கு தெரிவித் திருந்தனர். ஆனால் தமிழக அரசு இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு வரு மானவரித்துறை கடிதம் எழுதி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner