எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் தலைமையில் கலைஞருக்கு வீர வணக்கம்!

சென்னை, செப். 3 சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், "கலைஞருக்கு வீர வணக்கம்" எனும் மாபெரும் நினைவேந்தல் நிகழ்ச்சி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெறுகிறது.

மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ., முன்னின்று நடத்தும் இந்நிகழ்ச்சியில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று வீர வணக்க உரை நிகழ்த்துகின்றனர்.

இந்நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு: சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மற்றும் எழும்பூர் வடக்கு தெற்குப் பகுதிக் கழகங்கள் சார்பில், "கலைஞருக்கு வீரவணக்கம்" எனும் மாபெரும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (4.9.2018 செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணி அளவில் வேப்பேரி (டவுட்டன்) ரித்தர்டன் சாலையில் உள்ள பாலர் கல்வி நிலைய அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாடு செய்துள்ளார்.

‘தமிழினத் தலைவர் கலைஞர்’ அவர்களின் புகழுக்கு வீர வணக்கம் செலுத்தும் இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகிக் கிறார். இதில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முனைவர் தமிழச்சி தங்கப் பாண்டியன், சாலமன் பாப்பையா,  சுகிசிவம், பட்டிமன்றம் எஸ்.ராஜா ஆகியோர் ``கலைஞருக்கு வீர வணக்கம்"  உரை நிகழ்த்துகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner