எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.3   வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.32.50 உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் வெள்ளிக் கிழமை  (ஆகஸ்ட் 31) வரை ரூ.806ஆக இருந்தது. அதன் விலை சனிக்கிழமை (செப்.1)  முதல் ரூ.838.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் ரூ.486.42-லிருந்து ரூ.488.01ஆக சனிக்கிழமை (செப்.1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1.59ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு சமையல் எரிவாயு உருளைக்கு சனிக்கிழமை (செப்.1) முதல் ரூ.838.50 செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.350.49 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய

தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை

புதுடில்லி, செப்.3   மத்திய அரசு பணி களுக்காக ஆள்களை தேர்வு செய்யும் பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அந்த தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எஸ்எஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக நாட்டின் பல இடங் களிலும், டில்லியிலும் அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தேர்வு வாரியத்தின் தேர்வு முறைகள் சிபிஅய் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து எஸ்எஸ்சி தேர்வு களில் முறைகேடு நடந்திருப்பதாகவும் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரியும், அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர் சாந்தனு குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருந்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். ஏ. பாப்தே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஅய் சார்பில், விசாரணை முடிவை அறிக்கையாக தாக்கல் செய் தனர். அறிக்கையில், தேர்வின் வினாத் தாள் வெளியான விவகாரத்தில், தேர்வு வாரியத்தின் அதிகாரிகள் மட்டுமல்லாது வினாத்தாளின் பொறுப்பாளருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள், தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வரவுள்ளன. தேர்வில் முறை கேடுகள் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினர்.

அறிக்கையை படித்த பின்பு நீதி பதிகள் கூறுகையில், எஸ்எஸ்சி அமைப்பு ஊழலின் மொத்த உருவமாக உள்ளது. தேர்வின் முதல் கட்டத்தில் இருந்தே முறைகேடு நடைபெற்றிருக் கிறது. 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்வுகள் அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளது. வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்தி ருக்க வேண்டியவரே, அதை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது. தவறான முறையில் தேர்வு எழுதி அரசு பணிக்கு வருபவர்களை அனுமதிக்க முடியாது’ என்றனர். மேலும், எஸ்எஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தேர்வு வாரியத்தின் மூலம், மத்திய அரசின் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள குரூப் பி, குரூப் சி மற்றும் குரூப் டி என பல நிலைகளுக்கு இணைய வழி தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner