எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 4- மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி சார்பில், பெரியார் - அண்ணா என்ற தலைப் பில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. முதல் கட்டமாக மாவட்ட அளவி லான பேச்சுப்போட்டி ஜூலை 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் நடைபெற்றது. இதில் 1500 கல்லூரிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள் இப்போட் டியில் பங்கேற்றனர்.

இதில் முறையே மூன்று மாணவ - மாணவிகள் தேர்ந் தெடுக்கப்பட்டு முதல் பரிசாக 6 ஆயிரம், இரண்டாம் பரிசு 4 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக மண்டல அளவிலான பேச்சுப் போட்டிகள் சென்னை, கட லூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஏழு மண்டலங்களில் நடைபெற் றது. ஒவ்வொரு மண்டலத்திற் கும் மூன்று பேர் தேர்வு செய் யப்பட்டு முறையே 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப் பட்டது. மண்டல அளவிலான போட்டிகளில் 120 மாணவ - மாணவிகள் பங்கேற்று, மாநிலப் போட்டிக்கு 21 பேர் தகுதி பெற்றனர். 2.9.2018 அன்று மாநில அளவிலான பேச்சுப் போட்டி சென்னை - புரசை வாக்கத்தில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பான் செக்கர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தி.அட்சயா முதல் பரிசு ஒரு இலட்சமும், 30 ஆயிரம் மதிப்பிலான பெரியார்-அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும் பெற்றார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறி வியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஆ.நாகமுத்துப்பாண் டியன் இரண்டாம் இடம் பிடித்து ரூபாய் 50 ஆயிரமும், பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப்பதக்கமும் பெற்றார். சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் இ.பிரதீப் மூன்றாம் இடம் பிடித்து ரூபாய் 25 ஆயிரமும், பெரியார் -- அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு

வெற்றி பெற்ற மாணவ -- மாணவிகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்துப் பாராட் டுத் தெரிவித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner