எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், செப்.4 மத்தியப் பிரதேச மாநிலம், நரசிங்ப்பூரை சேர்ந்த வர் மன்மோகன் சிங் லோதி, மாற்றுத் திறனாளியான இவர் தேசிய அளவில் நடை பெற்ற மாற்றுத் திறனாளி களுக்கான தடகளப் போட்டி களில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார். தேசிய அளவில் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற தால் மன்மோகன் சிங் லோ திக்கு உதவித்தொகை மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறி விப்பு வெளியிட்டார்.

எனினும்,முதல்வர் அறிவித்தபடி  உதவித்தொகையும், வேலையும் லோதிக்கு வழங் காததால் வறுமை காரணமாக அவர் வீதியில் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார். இச் சம் பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மன்மோகன் சிங் லோதி கூறுகையில், நான் முதல்வரை நான்கு முறை சந்தித்து அவர் கொடுத்த வாக்குறுதிகள்பற்றி நினை வூட்டினேன். இருந்தா லும் அவை ஏதும் அரசு தரப் பில் நிறைவேற்றவில்லை. நான் வறுமையில் இருப்பதால் விளையாட்டு பயிற்சி மேற் கொள்ளவும், குடும்பத்தை காப்பாற்றவும் போதிய பண வசதி இல்லை.

ஏற்கெனவே முதல்வர் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றாதபட்சத்தில் வயிற்று பிழைப்புக்காக தொடர்ந்து வீதியில் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner