எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கிய கிருஷ்ணதேவராயரின் காணிக்கை நகைகள் எங்கே?

மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

அமராவதி, செப்.4 ஆந்திர மாநிலம், ஏலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி.கே.எஸ்.ஆர்.அய்யங்கார், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் திருப்பதி தேவஸ்தானம் உட்பட சம்பந்தப்பட்ட ஆந்திர அரசு துறைகளுக்கு மனு அனுப்பினார்.

அதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பழங்கால கோயில்கள், கட்டடங்கள் மற்றும் நகைகள் குறித்த விவரங்களை வழங்குமாறு கோரியிருந்தார். ஆனால் எந்த பதிலும் வராததால் மத்திய தகவல் ஆணையத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட மத்திய தகவல் ஆணையம், இதுகுறித்து வரும் 28 ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்கவேண்டுமென, ஆந்திர அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி மய்யத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

திருப்பதி கோயில்மீது உள்ள கல்வெட்டுகளில், கிருஷ்ணதேவ ராயர் வழங்கிய காணிக்கை விவரங்கள் அடங்கி உள்ளதாகவும், ஆனால், இதன்படி தற்போது எந்தவொரு நகையும், திருவாபரண பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை எனவும் அய்யங்கார் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கும் தேவஸ்தானம் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner