எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கிரசு வலியுறுத்தல்

பனாஜி, செப்.5  கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் அரசு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்காவிற்கு இரண்டு முறை சென்று சிகிச்சை பெற்று வந்த அவர் நாடு திரும்பியபிறகு மீண்டும் உடல்நிலை பாதிக் கப்பட்டது. மறுநாளே மும்பை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி கடந்த வியாழக் கிழமை மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக அமெ ரிக்காவுக்கு சென்றார். வரும் 8-ஆம் தேதி நாடு திரும்புவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருப் பதால் அவரது பணிகள் பாதிக் கப்பட்டிருப்பதாகவும், முதல்வர் தொடர்ந்து பொறுப் பில் இல்லாததால் மாநிலத்தில் குடிய ரசுத் தலைவர்ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என் றும் காங்கிரசு கட்சி வலியு றுத்தி உள்ளது.

இதுபற்றி கோவா மாநில காங்கிரசு செய்தி தொடர்பாளர் ராமகாந்த் காலப் கூறுகையில், கோவா மாநிலம் தற்போது அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி வலியுறுத் துவதற்காக, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். உடல்நிலை பாதிக்கப்பட்டி ருப்பதால் முதல்வர் பாரிக்கர் தனது அலுவலகத்திற்கு வரா மல் உள்ளார். அவரது பொறுப் புகளை வேறு யாரிடமும் கொடுக்கப்படவில்லை. மேலும் அமைச்சர்கள் பாண்டு ரங்க மட்காய்கர், பிரான்சிஸ் டிசோசா ஆகியோரும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வரும் அமைச்சர்களும் எப்போது வருவார்கள் என்ற தகவல்கள் ஏதுமில்லை. மாநி லம் அரசியலமைப்பு நெருக் கடியை எதிர்கொண்டிருப்ப தால் இந்த விசயத்தில் ஆளுநர் தலையிடவேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner