எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈரோடு, செப். 6-  அடிக்கடி உயர்த் தப்படும் நூல் விலை உயர் வால், 30 ஆயிரம் விசைத்தறியா ளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு விசைத்தறி உரிமையா ளர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கதிரவனி டம் ஈரோடு விசைத்தறி உரி மையாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக மக்களின் வாழ்வாதாரமாக விசைத்தறி தொழில் உள்ளது. வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில், பெரும்பா லான விசைத்தறி உரிமையாளர் கள் தங்களின் விசைத்தறிகளில் செயற்கை நூல் எனப்படும் ரயான் நூல்களை, நூல் மில் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து துணி உற்பத்தி செய்கின்றனர். ரயான் நூலுக்கு உண்டான மூலப் பொருள் மாதம் ஒரு முறை தான் விலை ஏற்றம் இறக்கம் செய்யப்படுகிறது.

ஆனால், கடந்த 15 நாட் களில் ரயான் நூல் கிலோவுக்கு ரூ.202இல் இருந்து ரூ.224 ஆக உயர்ந்துள்ளது. இது போன்ற விலையேற்றத்தால், நாங்கள் நூல் கொள்முதல் செய்து அதை துணியாக உற்பத்தி செய்வதற்கு குறைந்தது 10 முதல் 15 நாட்கள் ஆகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யும் ரயான் துணிகளுக்கு நூல் விலை உயர்ந்த அளவிற்கு துணி விலை உயர்த்தி வாங்க முடியாத சூழலில் தற்போதைய மார்க்கெட் நிலவரம் உள்ளது. இதனால் அனைத்து விசைத்தறி உரிமையாளர்களும் தொழிலை மிகுந்த சிரமத்துடன் செய்ய வேண்டி உள்ளது. துணிகளுக்கு சரியான விலை கிடைப்ப தில்லை. ஆகையால் மாதம் ஒரு முறை நூல் விலை நிர்ண யம் செய்வதால் சந்தையில் சீரான வியாபாரம் செய்ய வழி வகுக்கும். மாவட்ட நிர்வாகம் இதை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப் பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner