எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.6 அரசுப் பள்ளிகளில் பிறமொழிப் பாடப் புத்தகங்கள் அனைத்தும் செப் டம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தமிழக அரசு செவ்வாய்க் கிழமை தெரிவித்தது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தமிழ் தவிர பிற மொழிப் பாடங்களான மலை யாளம், சமஸ்கிருதம், ஜெர்மன், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்சு, இந்தி உள்ளிட்ட மொழிகளைத் தேர்வு செய்து படிக்கலாம்.

கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கிய நிலையில், இதுவரை பிற மொழிப் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு அதற்குரிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வில்லை. இதுதொடர்பாக ஆங் கில நாளிதழ் ஒன்றில் செப்டம்பர் 3 ஆம் தேதி செய்தி வெளியாகியிருந்தது.

இந்த செய்தியை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண் டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகை யில், பிளஸ் 1 வகுப்பு மாணவர் களுக்கு தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னட மொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன் ஆகிய மொழி பாடப் புத்தகங்கள் தான் வழங்கப் படாமல் உள்ளன. ஆனால், இதற்கு மாற்றாக அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் அனைத்து மொழிப் பாடப் புத்தகங்களும் அரசு இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து மொழிப் பாடப் புத்தகங்களும் முறையாக புத்தக வடிவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதி பதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner