டாக்கா, செப். 7- வங்கதேச தலை நகர் டாக்காவில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதிக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்கா பெரு நகர காவல்துறை ஆணையர் அசாதுஜமான் மியா செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
தலையில் தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் அதிகப்பட்சம் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண் டும். மோட்டார் சைக்கிள் ஓட் டுவோருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்வோரும் தலையில் தலைகவசம் கட் டாயம் அணிந்திருக்க வேண் டும் என்றார் அவர்.
வங்கதேசத்தில் அண்மை யில் தறிகெட்டு ஓடிய பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயி ரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, சாலை வசதியை மேம்படுத்தக்கோரி, வங்க தேசத் தலைநகர் டாக்கா மற் றும் பிற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர் கள், பொது மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் வங்கதேசத்தில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலை மையில் நடைபெற்ற அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறு வோருக்கு கடுமையான தண் டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தெற்காசிய நாடுகளில் மிகவும் மோசமான சாலைகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக வங்கதேசம் கருதப்படுகிறது. அந்நாட்டில் சாலை விபத்து களில் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழப்பதாக ஆய்வு தக வல் ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த மாதம், ஈது பண் டிகை விடுமுறை காலத்தில் மட்டும் 13 நாள்களில், பல் வேறு விபத்துகளில் 259 பேர் பலியாகினர். மேலும் 960 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.