எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லியை சேர்ந்த நபர் மீது, அவரது மனைவி அளித்த புகாரின் படி, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இரு வரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில், தனக்கும், தன் மகனுக்குமான பராமரிப்பு செலவுக்காக, பிரதி மாதம், ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுத் தரும்படி, அந்த பெண், கீழ் நீதிமன்றத்தில் முறை யிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன் றம், அந்த பெண்ணுக்கு, ஒவ்வொரு மாத மும், 15 ஆயிரம் ரூபாய் அளிக்க, கணவ ருக்கு உத்தரவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அந்த நபர், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி சஞ்ஜீவ் குமார், அவரது கோரிக் கையை நிராகரித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது: மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிப்பது, கணவரின் கடமை. இந்த வழக்கில், சம்பந்தப் பட்ட நபர், மாதம், 40 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். அவரது மனைவி எந்த வேலைக்கும் செல்லவில்லை. எனவே, அவரது பராமரிப்புக்காக, மாதம், 10 ஆயிரம் ரூபாயும், குழந்தையின் பராமரிப்புக்கு, மாதம் 5,000 ரூபாயும், கணவன் தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில், கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பு சரியே. இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.

- நன்றி: ‘சட்டக்கதிர்’ ஆகஸ்ட் 2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner