எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, செப், 8- இந்திய மோட் டார் வாகன சந்தையில் முன் னணியில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (ஜிரிவி) நிறுவனம், தற்போது மேம்படுத் தப்பட்ட இனோவா கிரிஸ்டா மற்றும் மேம்படுத்தப்பட்ட பா£ட் யூனர் பதிப்புகளை அறிமுகப் படுத்தியுள்ளது.

அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு இணங்க, இனோவா கிரிஸ்டா மற்றும் இனோவா ட்யூரிங் ஸ்போர்ட் ஆகியவற்றின் சேப்டி மற்றும் செக்யூரிட்டி பகுதிகளை மேம் படுத்தியுள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 2018 வரையி லான காலப்பகுதியில் நாங்கள் கடுமையான தேவையைப் பதிவு செய்துள்ள 52,000க்கும் அதிக மான அளவிற்கு வாகனங்களை விற்பனை செய்துள்ளோம்.

இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 13 சதவீதம் வளர்ச்சியை இந்த ஆண்டில் கண்டுள்ளது என இந்நிறுவனத் தின் துணை நிர்வாக இயக்குநர் என்.ராஜா தெரிவித்துள்ளார்.


1,500 பேருக்கு வேலைவாய்ப்பு: நிசான் திட்டம்

சென்னை, செப். 8- ஜப்பானைச் சேர்ந்த மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்தியாவில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நிசான் நிறுவ னத்தின் தலைவர் (ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா) பெய்மேன் கார்கர் தெரிவித்ததாவது:

இந்தியாவில் நிறுவனத்தின் நிலைத் தன்மையை மேலும் அதிகரிக்க உறுதி பூண்டுள் ளோம். அதன் ஒரு பகுதியாக நிசான் மற்றும் டாட்ஸன் நிறு வனங்களுக்கு தனித்தனியாக விநியோகஸ்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். குறிப் பாக, சிறிய நகரங்களில் அதனை தீவிரமாக செயல்படுத்த திட்ட மிட்டுள்ளோம்.

மேலும், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யங்கள், டிஜிட்டல் முனை யங்களை வலுப்படுத்தும் வகையில் மொத்தம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தீவிரமாகவுள் ளோம்.

தற்போதைய நிலையில், சென்னைக்கு அருகேயுள்ள நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யத்தில் ஏற்கெனவே 7,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், புதிய முதலீடுகளை பெருக்குவதன் மூலம் மேலும், 1,000 பேருக்கு வேலைவாய்ப் புகளை அளிக்கவுள்ளோம். புதி தாக உருவாக்கப்படும் டிஜிட் டல் முனையங்களில் எஞ்சிய 500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner