எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறநிலையத் துறை நடவடிக்கை

சென்னை, செப்.8 கோயில்களில் பூஜை, பரிகாரம் செய்வதாக இ&-சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணைய தளங்கள் மீது குற்றவியல் நட வடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38,646 கோயில்கள் உள்ளன. இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் அதிக மான கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயில்களில் அபிஷேகம், தங்கரதம், தங்கத்தொட்டில், இ&உண்டியல், இ&நன்கொடை ஆகிய சேவைகளைப் பெற, உலகின் எந்த பகுதியிலிருந்தும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளும் வசதி சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தனியார் நிறுவனத்திடம் மென்பொருளைப் பெற்று, இந்த இணையதள சேவைகளை அறநிலையத்துறை வழங்கிவருகிறது.

இந்த நிலையில், தனியார் இணைய தளங்கள்மூலம் இ&சேவையில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை யடுத்து, அறநிலையத்துறைமூலம் இ&சேவை கட்டணங்களைப் பெறும் தனியார் இணையதளங்கள் குறித்து ஆய்வு செய்யப் பட்டது. இதில், பல தனியார் இணைய தளங்கள் இ&சேவை வழங்குவதாக விளம் பரம் வெளியிட்டு, பக்தர்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இ_பூஜை உள் ளிட்ட இ_சேவைகள் அனைத்தையும் அந் தந்த கோயில்களின் இணையதளங்கள் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

கோயில்களுக்கு சம்பந்தம் இல்லாத நிறுவனங்களால் இ&சேவைகளுக்கு கட் டணம் முன்பதிவு செய்யப்படுவது தெரிய வந்தால் காவல்துறைக்கு புகார் தெரிவித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும் கோயில் நிர்வாக அலுவலகங்களுக்கு அற நிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner