எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, செப்.10 தொடரும் டீசல் விலை உயர்வு காரண மாக லாரிகளின் சரக்கு கட் டணத்தை 15 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலை வர் சி.சாத்தையா கூறியது: டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகால சரக்குப் போக்குவரத்து தொழிலில், இதுபோன்ற விலையேற் றத்தைக் கண்டதில்லை. சரக்கு மற்றும் சேவை வரி அமலாக் கத்துக்குப் பிறகு இருந்தே, 30 சதவீதம் வரை சரக்குப் போக் குவரத்து குறைந்துவிட்டது. அதற்குப் பல்வேறு கார ணங்கள் கூறினாலும், லாரி தொழிலில் ஈடுபடுவோர் சரக் குகள் குறைந்ததால் நேரடி யாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே சரக்குகள் வரத்து குறைந்துள்ள நிலையில், உட னடியாக சரக்கு கட்டணத்தை உயர்த்த முடியாத நிலையில் இருந்து வந்தோம்.

ஆனால், இரு மாதங்களில் ஏற்பட்டிருக்கும் கடுமையான டீசல் விலையேற்றத்தால் வேறுவழியின்றி சரக்கு கட்ட ணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளோம். மத்திய, மாநில அர சுகள் நினைத்தால் டீசல் விலையேற்றத்தைக் குறைக்க முடியும். பெட்ரோலியப் பொருள்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரியைக் குறைத்தால் போதும். அடுத் தாக ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வந்தால் டீசல் விலை பெரு மளவுக்கு குறையும். டீசல் விலை குறையாதபட்சத்தில் 15 சதவீதம் கட்டண உயர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.


விபத்தில் பார்வை இழந்தவருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு

திருப்பூர், செப்.10 திருப்பூரில் நீதிமன்ற வளாகத்தில் 8.9.2018 அன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், சாலை விபத்தில் பார்வை இழந்தவருக்கு ரூ. 1 கோடிக்கான காசோலை இழப்பீடாக வழங்கப் பட்டது.

திருப்பூர், காங்கயம் சாலை, அமர்ஜோதி கார்டனில் வசித்த ஜெயபிரகாஷ்பூபதி கடந்த 2013 மார்ச் மாதம் பெருமாநல்லூர் சாலையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் அவரது இரு கண்களும் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதையடுத்து ஜெயபிரகாஷ்பூபதியின் மனைவி சுமதி, விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் காப்பீடு நிறுவனம் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட ஜெய பிரகாஷ்பூபதிக்கு காப்பீடு நிறுவனம் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner