எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.10 விண் ணப்பம் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட தவறின் காரணமாக கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு அனுமதி வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பொறியாளர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 தேர்வுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நான் விண்ணப்பித்தேன். அந்த விண் ணப்பத்தில் எனது பிறந்த தேதி மற்றும் பிளஸ் 2 சான்றிதழ் எண்ணை தவறாக குறிப்பிட்டு விண்ணப்பித்து விட்டேன். தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நான் தேர்வில் 25 ஆவது இடம் பிடித்தேன். இதனையடுத்து தேர்வாணையம் தேர்ச்சி பெற்ற வர்களின் சான்றிதழ்களை, சான்றிதழ் சரிபார்ப்புக்காக இணயதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டது. நானும் எனது சான்றிதழ்களைப் பதி வேற்றம் செய்தேன். ஆனால் நான் கலந்தாய்வுக்கு அழைக் கப்படவில்லை.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கேட்ட போது, எனது பிறந்த தேதி மற்றும் பிளஸ் 2 சான்றிதழ் எண்ணில் மாற்றம் இருப்பதால் என்னை கலந்தாய்வுக்கு அழைக்க வில்லை எனத் தெரிவித்தனர். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த போது தெரியாமல் தவறு ஏற்பட்டு விட்டது. எனவே, என்னை கலந்தாய்வில் அனுமதிக்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்ரு ஹன புஜ் ஹரி முன் விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் விமல், பி.கிரிம்சன், வி.ருத் ராபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசா ரித்த நீதிபதி, மனுதாரரை டிஎன்பிஎஸ்சி, கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக் கவும், கலந்தாய்வின் முடிவு இந்த வழக்கின் இறுதி தீர்ப் புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்


முன்னறிவிப்பு இன்றி ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு:  வெள்ளத்தில் 3 பேர் சிக்கினர்

பொள்ளாச்சி, செப்.10 கோவை மாவட்டம் வால்பாறை அருகே காடம்பாறை, அப்பர் ஆழியாறு ஆகிய இடங்களில் நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிலையில், நேற்று மின் உற்பத்திக்கு பின் காடம்பாறை, அப்பர் ஆழியாறு மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆழியாறு அணைக்கு வரத்தொடங்கியது. ஏற்கெனவே அணையின் நீர்மட்டம் 119 அடியாக இருந்ததால் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 232 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அணைக்கு திடீர் என்று நீர்வரத்து அதிக ரித்ததால் பாதுகாப்பு கருதி பொதுப்பணி துறை அதிகாரிகள் நேற்று காலை 6 மணி அளவில் ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக முதலில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டனர். பின்னர் படிப்படியாக அதி கரித்து அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இவ்வாறு முன்னறிவிப்பு எதுவும் இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டதால் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றில் 10 மணி அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அங்கு துணி துவைத்து கொண்டும், குளித்து கொண்டும் இருந்த பலர் சுதாரித்து கொண்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆற்றில் இருந்து வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர்.

இதில் ஆற்றின் மய்யப்பகுதி யில் இருந்த மாக்கினாம்பட் டியை சேர்ந்த சக்திவேல் (வயது 40), போடிபாளையத்தை சேர்ந்த சத்தியாதேவி (32), கருப்பசாமி (36) ஆகியோர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்க ளால் கரைக்கு திரும்ப முடிய வில்லை. 3 பேரும் வெள்ளத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் தடுமாறி அங்கிருந்த பாறையை பிடித்துக்கொண்டனர்.

பின்னர் பாறை மீது அமர்ந்து கொண்ட 3 பேரும் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட் டனர். இதை பார்த்த பொது மக்கள் உடனடியாக இது குறித்து பொள்ளாச்சி தீய¬ ணப்பு மற்றும் மீட்பு துறையி னருக்கு காலை 10.45 மணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடி யாக தீயணைப்பு நிலைய அலு வலர் புருசோத்தமன் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் கண்ணன், ராஜ், உமாபதி, சுல் தான் ஆகியோர் விரைந்து வந் தனர்.

ஆற்றின் கரையில் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கயிற்றை பிடித்துக்கொண்டனர். மறுமுனையை பிடித்துக் கொண்டு 5 வீரர்கள் ஆற்றில் இறங்கி நீந்தி பாறையில் அமர்ந்து இருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். பாறையில் அமர்ந்து இருந் தவர்களை பாதுகாப்பு உடையை அணியச் செய்து ஒருவர் பின் ஒருவராக ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் 3 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner