எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிதம்பரம், செப். 10- சிதம்பரத்தில் காம ராசர் பெயரில்  அரசு பொது மருத்துவ மனை அமைந்துள்ளது. அம்மருத்துவ மனை வளாகத்தில் புதிதாக பிள்ளையார் கோயில் அமைக்கப்பட்டு கும்பாபி சேகம் நடத்தப்பட்டுள்ளது.

அரசமைப்புச்சட்டத்தின்படி இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்கின்ற நிலையில் அரசு அலுவலக வளாகங் களில் மத வழிபாட்டிடங்களை அமைக் கலாமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

சிதம்பரம் மாவட்ட கழகத் தோழர் கள் இவ்விவகாரத்தை அரசின் கவனத் திற்கு கொண்டு சென்றுள்ளனர். நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கண்டன போராட் டம் நடத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு அலுவலக வளாகங்களில் வழி பாட்டு இடங்கள், உருவங்கள், படங் கள் இருக்கக்கூடாது எனும் தமிழக அரசின் ஆணைகளுக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் பிள் ளையார் கோயில் அமைக்கப்பட்டு, கும்பாபிசேகமும் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கழகத்தின் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத் தில் சார் ஆட்சியரிடம் சிதம்பரம் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் மனுவை அளித்தார்கள். சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோ வன், செயலாளர் அன்பு.சித்தார்த்தன், இணை செயலாளர் யாழ்.திலீபன் ஆகியோர் கையொப்பமிட்டு அரசின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சிதம்பரம் காமராசர் அரசு பொது மருத்துவமனையில் புதிதாக ஒரு பிள் ளையார் கோயில் கட்டி 31.8.2018 அன்று கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளதாக அறிகிறோம். அரசு அலுவலக வளா கங்களில்  மத வழிபாட்டுத்தலங்களை அமைக்கக் கூடாது என்ற அரசாணை, தமிழக அரசால் 18.8.1994 அன்று வெளியிடப்பட்டது. அரசாணை இணைக்கப் பட்டுள்ளது.

இந்தக் கருத்து தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 17.3.2010 அன்று மீண்டும் ஒரு தீர்ப்பினை வழங் கியுள்ளது. (தீர்ப்பின் நகல் இணைக்கப் பட்டுள்ளது). ஒரு மதத்தினர் வழிப்பாட் டுத்தலம் அமைத்ததைத் தொடர்ந்து மற்ற மதத்தினரும் தங்கள் மதத்திற்கு வழிபாட்டுத்தலங்கள் அமைக்க முயன் றால் என்ன செய்வீர்கள்? மேற்படி கோயில் அமைப்பதற்கு யார் அனுமதி அளித்தது? இதற்கென அரசின் நடவ டிக்கை என்ன? இம்மடலின் அடுத்த கட்டமாக, எங்கள் தலைமைக்கழக வழிகாட்டலுக்கேற்ப, கண்டன ஆர்ப் பாட்டம் நடத்த நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மனு வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner