எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.11- தமிழகத் தில் கடந்த 2013-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட் களை விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய தாக எழுந்த குற்றச் சாட்டு மிகப் பெரிய விசயமாகி யுள்ளது.

இதன் தொடர்ச்சியாக குட்கா வியாபாரி மாதவராவ் பங்குதாரர்கள் குமார், சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண் டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட் டனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் சிறையில் அடைக் கப்பட்டனர்.குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள் ளிட்ட 5 பேரிடமும் மேலும் பல தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் அனை வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஅய் அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தப் பட்டனர்.அப்போது சிபிஅய் தரப்பில் 7 நாட் கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு நீதி மன்றம் அனுமதி அளித்ததால் மாதவராவ், அவரது பங்கு தாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், அதி காரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சிபிஅய் அதிகாரிகள் தங்களது விசா ரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். 5 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஅய் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 நாள் விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் மேலும் பல  தக வல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புதுவையில் ரெய்டு

மாதவராவ் மனைவி லட் சுமி காயத்திரிக்கு சொந்தமான சோப்பு ஆயில் தயாரிக்கும் நிறுவனமான சீனிவாசா கெமிக்கல் கம்பெனி புதுச் சேரியை அடுத்துள்ள திருபு வனையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா என்பது குறித்து சிபிஅய் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிறுவ னத்தில் பணி புரிந்து வரும் மேலாளர் தனபால், கணக் காளர் பாலு மற்றும் சுப்பை யாவிடம் அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டனர். இதில், குட்கா பதுக்கப்பட்டது குறித்து எந்தவித தடயங்களும் கிடைக்காததால் மேலாளர், கணக்காளர்களை விசாரணைக் காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். குட்கா விவகாரத் தில் சிபிஅய் சோதனை செய்தது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.