எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.11 ஆந்திரா ரயிலில் பயணித்த, சென்னை பெண்ணின், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், கொள்ளை அடிக்கப்பட்டன. தொடர் கொள்ளை சம்பவத்தால், ரயிலில், பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர், கோமலா, 65; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர், சில தினங்களுக்கு முன், தெலுங்கானா மாநிலம் செகந்தி ராபாதுக்கு, குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.நேற்று முன்தினம் இரவு, அய்தராபாத்தில் இருந்து, சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில், குடும்பத்தாருடன் சென்னை வந்து கொண்டிருந்தார். ரயில், நேற்று அதிகாலை, ஆந்திர மாநி லம், ஓங்கோல் - கூடூர் இடையே வரும்போது, அசந்து தூங்கியுள் ளனர்.அதிகாலை, 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, கோமலா அணிந்திருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்க, வைர நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. நேற்று காலை, ரயில், சென்னை சென்ட்ரல் வந்ததும், ரயில்வே காவல்துறையினரின் புகார் கொடுத்தனர்.  ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து, சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில், 8ஆம் தேதி இரவு, சென்னைக்கு வந்து கொண்டி ருந்த, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, விஜயலட்சுமியின், 32 சவரன் நகை கொள்ளையடிக்கப் பட்டது. இந்த கொள்ளை, ஆந்திர மாநிலம், ஓங்கோல் - கூடூர் இடையே நடந்துள்ளது. நேற்று அதிகாலை, சார்மினார் ரயிலிலும், இதே ஏரியாவில் கொள்ளை நடந்துள்ளது. பய ணியர் தூங்கும்போது, மயக்க மருந்து தூவி, இந்த கொள்ளை சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்க லாம் என, காவல்துறையினரிடம் சந்தேகப்படுகின்றனர்.

இது குறித்து, ஓங்கோல் ரயில்வே காவல்துறையினரிடம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.