எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ருத்ரபூர், செப். 11 -காவல்துறை பெண் அதிகாரியை மிரட்டியதாக, உத்தர்கண்ட் பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.

உத்தர்கண்ட் மாநிலம் ருத்ரபூரில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றுபவர் அனிதா கொய்ராலா. இவர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, விதிகளை மீறி வாக னத்தை ஓட்டியதாக ஒருவரை தடுத்து நிறுத்தியுள்ளார். அவரிடம் ஆவணங்களைத் தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர்,காவல்துறையினருடன் தகராறு செய் யவே, அவரை அனிதா கொய்ராலா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.இதனிடையே, காவல்துறையினரிடம் தக ராறில் ஈடுபட்ட நபருக்கு ஆதரவாக, ருத்ர பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் துக் ரால்காவல்நிலையத்திற்கே வந்து அதிகாரிக ளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிடிபட்ட நபரை விடுவிக்குமாறு, அதிகாரியான அனிதா கொய்ராலாவையும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.இதையடுத்து தற்போது காவல்துறை அதிகாரி அனிதா கொய்ராலா அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்ஏ ராஜ்குமார்துக்ரால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனிதா கொய் ராலாவை எம்எல்ஏ ராஜ்குமார் துக்ரால் மிரட்டும் வீடியோ காட்சிகள், சமூகவலைத் தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

சட்டப்பிரிவு 35ஏ விவகாரம் : காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்

மெகபூபா கட்சியும் புறக்கணிப்பு

சிறீநகர், செப்.11 காஷ்மீரில் சட்டப்பிரிவு 35ஏவுக்கு ஆதரவாக, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சியைத் தொடர்ந்து மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) அறிவித்துள்ளது.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 35ஏவின் படி, வெளிமாநிலத்தவர்கள் யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது. அம்மாநில பெண்கள், வெளிமாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டால், சொத்துரிமை கோர முடியாது. இந்த சிறப்பு சட்டப்பிரிவை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. சட்டப்பிரிவு 35ஏவுக்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, இந்தாண்டு இறுதியில் அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்து வதற்காக, வழக்கு விசாரணையும் ஒத்திவைக் கப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்பிரிவு 35ஏ விவகாரத்தில் நீதிமன்றத்திலும், வெளியிலும் மத்திய அரசும், மாநில அரசும் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காத வரையில் உள்ளாட்சித் தேர்தலிலும், 2019 மக்களவை தேர்தலிலும் பங்கேற்கப் போவ தில்லை என அம்மாநில முக்கிய எதிர்க் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி நேற்று முன்தினம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது மக்கள் ஜனநாயக கட்சியும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி உள்ளது. நேற்று நடந்த கட்சி உயர்மட்ட கூட்டத்திற்குப் பிறகு பேட்டி அளித்த முன்னாள் முதல்வரும், கட்சித்தலைவருமான மெகபூபா முப்தி கூறுகையில், ‘‘சட்டப்பிரிவு 35ஏவுக்கு ஆதர வாக நாங்கள் எந்த நிலைக்கும் செல்லத் தயார். காஷ்மீர் மக்கள் ஏற்கனவே பலவற்றை தியாகம் செய்து விட்டனர். எனவே சட்டப் பிரிவு 35ஏ விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது’’ என்றார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner