எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், செப்.11 மத்திய பிரதேச மாநிலத்தில், ஆண்டு தோறும் நடக்கும் கல்லெறி திருவிழாவில், ஒருவர் பரி தாபமாக உயிரிழந்தார்; 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த மாநிலத்தில், ஆண் டுதோறும், 'காட்மார்' என்ற பெயரில் திருவிழா நடந்து வருகிறது.இந்த விழாவின் போது, ஆற்றின் நடுவே கொடி ஒன்றை நட்டு வைத்து, இரு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஒருவரையொருவர் கற்களால் தாக்குவர். நேற்று நடந்த 'காட்மார்' திருவிழாவின் போது, பந் துர்னா, சவர்கான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள், ஒருவரை யொருவர் கற்களால் தாக் கினர். இதில், ஒருவர் உயி ரிழந்தார். மேலும், 250க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, சம்பவம் நடந்த பகுதியில், ஆம்புலன்சுகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டு இருந் தன. இதனால், காயமடைந் தோர், உடனடியாக மருத் துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.மத்திய பிரதேச மாநிலத்தில், 300 ஆண்டுகளுக்கு முன், காதல் விவகாரத்தில், இரு கிராம மக்களிடையே ஏற் பட்ட மோதலே, இந்த திருவிழா நடக்க காரணம் என கூறப் படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner