எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புனே, செப். 11- ஜனநாயகம் மற்றும் சுதந்திர சமூகத்துக்கு அரசியலமைப்பு உரிமைகளே அடிப்படை என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புனே யில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுகுறித்து தீபக் மிஸ்ரா பேசியதாவது:

நமது நாட்டில் அரசியல மைப்பு ரீதியில் ஜனநாயகம் உள்ளது. குடிமக்களின் உரிமை கள், சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மற்றும் ஒரே திட்டத்துடன் இது உருவாக்கப் பட்டது.

அரசியலமைப்பு சட்டத் தின்கீழ் உறுதி செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உரி மைகள் ஆகியவையே சுதந்திர மான சமூகம், ஜனநாயகத்துக்கு அடிப்படை. நமக்கு உரிமைகள் உள்ளது. அந்த உரிமைகளை அரசியலமைப்பு வரையறைக் குள் பயன்படுத்த வேண்டும்.

நீதியின் ஆட்சியின்கீழ் மக்களின் நலன்கள் அங்கீகரிக்கப் பட்டிருப்பதுடன், பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. நீதியின் ஆட்சி குலையுமெனில், சட் டத்தின் ஆட்சியும் தாமாக குலைந்துவிடும்.

உயிர் வாழ்வதற்கு எப்படி ஒரு மனிதருக்கு உரிமை இருக் கிறதோ, அதேபோல் கண்ணிய மாக மரணிக்கவும் உரிமை உள்ளது. கருணைக் கொலை விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் திற மையாக கையாண்டது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டபோது, தனி நபர் ஒருவருக்கு எப்படி உயிர் வாழ்வதற்கு உரிமை உள் ளதோ, அப்படியே கண்ணியத் துடன் மரணிக்கவும் உரிமை உள்ளது என்று தெரிவித்தது. சில மேலைநாடுகளை பார்த் தால், கருணைக் கொலை விவ காரத்தில் சரியான முடிவை எடுக்க முடியாமல் திணறுவதை பார்க்கலாம் என்றார் தீபக் மிஸ்ரா.

நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட் னவீஸ், உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதி பதி (பொறுப்பு) நரேஷ் பாட் டீல் ஆகியோர் கலந்து கொண் டனர்.