எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 12- `மோடி ஆட்சியில் நடுத் தர மக்களுக்கு நிம்மதி இல்லை, பெட் ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வால் அடித்தட்டு மக்களுக்கு வயிறு எரிகிறது’ என்று பாஜக மீது அதிமுக விமர்சனம் செய்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்தியில் உள்ள மோடி அரசுக்கு ஆதரவான நிலைப் பாட்டையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக எடுத்து வருகிறார்கள்.

தமிழக மக்களுக்கு எதிரான திட்டங் களை மத்திய அரசு நிறைவேற்றினால் பகிரங்க எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.

இதுபோன்ற நடவடிக்கை தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கே அதிருப்தியை ஏற்படுத்தி யது.

சமீபத்தில், சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் இது பகிரங்கமாக வெளிப்பட்டது. அதிமுக எம்பி வைத்திலிங்கம், மத்திய அரசுக்கு எதிரான கருத்தை தெரிவித்தார். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.

இன்னும் 6, 7 மாதங்களில் நாடாளுமன் றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள் ளது. இந்த தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைப்பதற்கான நெருக்கடியை மத்தியில் உள்ள அரசு கொடுத்து வருகிறது.

அதனால்தான், தமிழகத்தில் ஆளுங் கட்சி அமைச்சர்கள், அரசு டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள், உயர் அதிகாரிகள் வீடுகளில் வருமான வரி சோதனை, சிபி அய் சோதனை என்று தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுபோன்ற பாஜகவின் நெருக்கடிக ளுக்கு பயப்படாமல், அதிமுக அரசு செயல்பட வேண்டும். தமிழக பாஜகவில் தொண்டர்களே இல்லை. இவர்களுடன் கூட்டணி சேர்வதால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை என்று அதிமுக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வரு கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், ஆளும் அதிமுக அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகை யில் மத்திய பாஜக அரசை பகிரங்கமாக எதிர்த்து நேற்று செய்தி வெளியிடப்பட் டுள்ளது.

இந்த பத்திரிகையை முதல்வர் எடப் பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்பார்வையில் மூத்த அமைச்சர்கள்தான் நடத்தி வருகிறார் கள். இதில் வரும் செய்திகள் அமைச்சர் களுக்கு தெரியாமல் வர வாய்ப்பு இல்லை.

பாஜகவின் மாற்றாந்தாய் மனப்பான்மை

அதிமுக நாளேடு சாடல்

அப்படி இருக்கும் சூழ்நிலையில், அதி முக அரசுக்கு ஆதரவான பத்திரிகையில்,

“மத்திய மோடி ஆட்சியில் ஊழல் இல்லை என்றாலும், மனிதன் நிம்மதியாய் வாழ முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலையேற்றம் கவலை தருகிறது. எரி பொருள் விலை ஏறினால் அனைத்து பொருட்களும் விலையேறும். இதனால் சாமானிய மக்கள் கவலைப்படுவார்கள் என்பதுகூட மத்திய அரசுக்கு தெரிய வில்லை. சிலிண்டர் விலை ரூ.1000அய் தொடும் நிலையில் உள்ளதால் நடுத்தர மக்கள் நிம்மதி இழக்கிறார்கள். அடித்தட்டு மக்களுக்கு அடிவயிறு எரிகிறது. இந்திய பணத்தின் வீழ்ச்சி வரலாறு காணாத அளவுக்கு போய்விட்டதால் அமெரிக்க டாலர் மதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் இந்திய வர்த்தகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்குறைப்பு, வேலைஇழப்பு அதிகளவில் நடக்குது. வருமான வரி உச்சம், ஜிஎஸ்டி கொடுமை என பல பிரச்சினைகள் மக்களுக்கு ஏற் பட்டுள்ளது. தாமரை ஆளாத மாநிலங் களை மாற்றாந்தாய் போக்கோடு மத்திய அரசு நடத்துகிறது. ஆகாய விமானத்திலும் குழாயடி சண்டை’’ என்று நேற்று செய்தி வெளியாகி உள்ளது.

அதிமுக அரசின் ஆளுங்கட்சி பத்திரி கையில் மத்திய மோடி அரசை பகிரங்கமாக எதிர்த்து செய்தி வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.