எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: பிராமணர்கள் தமிழரே இல்லை என் கிறார்களே தி.க.வினர்?

பதில்: யார் தமிழன்... யார் தமிழன் இல்லை என்று சான்றிதழ் கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், ஆயுத பூஜை கொண்டாடுகிற, அப்பா, அம்மா, வணக்கம் என்று பேசுகிற பிராமணர் தமிழர் இல்லையாம்... கிறிஸ்துமஸ், ரம்ஜான் கொண்டாடும் 'அஸ்ஸலாம் அலைக்கும்'  'குட்மார்னிங்' சொல்கிற முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இவர்கள் அகராதியில் தமிழர்களாம்... காதில் பூ சுற்ற வேண்டாம்.

- ('விஜயபாரதம்' 30.6.2017 ஆர்.எஸ்.எஸ். வார இதழ்)

பார்ப்பனர்கள் தமிழர்கள் என்பது உண்மையானால், அங்கே பிராமணன் எங்கே இருந்து வந்தான்? சூத்திரன் எங்கிருந்து வந்தான் பிறப்பின் அடிப்படையில்?

இந்தப் பிர்மா பிராமணர்களுக்காகவே இந்த லோகத் தைப் படைத்தான் என்கிற மனுதர்மம் எங்கிருந்து குதித்தது?
அந்தப் பார்ப்பனர்களுக்குத் தாய்மொழி சமஸ்கிருதம் என்பது எப்படி? ஒருவருக்குத் தாய்மொழி ஒன்றாகத் தானே இருக்க முடியும் - ஒரு தகப்பன் இருப்பதுபோல.

நெருக்கடியான கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் கட்டத்தில் மட்டும் நான் தமிழன் என்று சொன்னால் போதுமா? மற்றபடி மொழியால், மொழி உச்சரிப்பால் பண்பாட்டால், பழக்க வழக்கத்தால், நடைமுறைகளால், உறவு முறைகளால் பார்ப்பனர்கள் தமிழர்களாக வாழ் கிறார்களா?

கன்னியாகுமரியில் வாழும் பார்ப்பானிலிருந்து கலி போர்னியாவில் வாழும் பார்ப்பனர் வரை தமிழை உச்சரிக்கும் முறை ஒரே மாதிரியாக இருப்பானேன்? பார்ப்பனர் அல்லாதாரின் உச்சரிப்பிலிருந்து முற்றிலும்  அவர்கள் மாறுபட்டு இருப்பது ஏன்?

எந்தப் பார்ப்பான் தமிழில் பெயர் சூட்டுகிறான்? பார்ப்பனர்கள் உண்மையிலேயே தமிழர்கள் என்றால், தமிழ்மொழிதான் அவர்களின் தாய்மொழி என்று ஒப்புக் கொண்டால், கோயில்களில் எங்கள் தாய்மொழியான தமிழ்தான் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று போராட முன்வராதது ஏன்? போராடா விட்டாலும் பரவாயில்லை, வழிபாட்டில் தமிழ் இருக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால் பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அதனை வரவேற்க வேண்டாமா? மாறாக உச்ச நீதிமன்றம் வரை சென்று தடுக்க முட்டுக்கட்டை போடப் பார்ப்பனர்கள் முயலுவது ஏன்?

பூஜை வேளையில் சங்கராச்சாரியார் தமிழில் பேசாதது ஏன்? தமிழை நீஷப்பாஷை என்று கருதுவது ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள்தான் என்று பார்ப்பனர்கள் கருதுவது உண்மை யானால் அந்தத் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உரிய பயிற்சி பெற்று கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் பொழுது உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்குவது ஏன்?
தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், ஆயுத பூஜை கொண் டாடுகிறார்களாம் பார்ப்பனர்கள் - அதனால் அவர்களைத் தமிழர்களாக ஒப்புக் கொள்ள வேண்டுமாம்.

தமிழ் ஆண்டு என்கிறதே 'விஜயபாரதம்' - அந்த அறுபது ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயரில்லையே ஏன்? இதைப் பற்றி என்றைக்காவது பார்ப்பனர்கள் அக்கறை செலுத்தியதுண்டா? மாறாக தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சட்டம் இயற்றினால் அதனை எதிர்ப்பது ஏன்? திமுக ஆட்சி சென்று, அதிமுக ஆட்சி வந்தவுடன் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பார்ப்பனர் மீண்டும் அந்தப் பழைய சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட வரு ஷத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?
பொங்கலை  சங்கராந்தி என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடுவானேன்? இயற்கையான அந்த அறுவடைத் திருவிழாவிற்குப் புராண முலாம் பூசி பார்ப்பன மயமாக் குவானேன்?

ஆயுத பூஜையைப் பார்ப்பனர்கள் கொண்டாடுவதால் தமிழர்களாம்! ஆயுத பூஜை தமிழர் விழா என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? சங்க இலக்கியத்தில் இருக்கிறதா? எட்டுத் தொகையில்தான் இருக்கிறதா?

தீபாவளிக்கும், தமிழர்களுக்கும் தான் என்ன சம் பந்தம்? நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திணிக் கப்பட்டதற்கு யார் காரணம்!
இந்து மதப் புராணங்களில், இதிகாசங்களில் காணப்படும் சுரர்கள் யார்? அசுரர்கள் யார்? சுரர்கள் என்றால் - ராமணர்கள், அசுரர்கள் என்றால் திராவிடர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்பனர் உட்பட) எழுதிக் குவித்திருக்கிறார்களே, இதற்கு அறிவு நாணயமான பதில் என்ன?
எந்தப் பார்ப்பான் வீட்டில் தமிழின் அடிப்படையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடக்கின்றன? விரலை மடக்குங்கள் பார்க்கலாம்.
முஸ்லிம்கள் மார்க்கத்தால் வேறுபட்டு இருக்கலாம். சென்ற தலைமுறையில் மதம் மாறிய காரணத்தால் அவர்கள் தமிழர்கள் இல்லாமல் போய் விடுவார்களா?

பார்ப்பன இந்து மதத்தில் வருணாசிரம ஜாதி அமைப் பின் காரணமாக, தீண்டாமைக் கொடுமை காரண மாகத்தானே அவர்கள் மதம் மாறினார்கள்? அந்த மதமாற்றத்திற்குப் பார்ப்பனர்களே காரணமாக இருந்து கொண்டு குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், குழியும் பறித்த கதையாக அவர்களை எதிரிகளாகப் புனைவது மோசடியல்லவா?

தங்களின் பிறவி ஆதிக்கத்தை எதிர்த்துப் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் கிளம்பி விடுவார்கள்   என்பதைத் திசை மாற்றம் செய்யத் தானே இந்த மாய்மாலம்!

கடைசியாக ஒன்று! எழுத்தாளர் சிவசங்கரி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் ஒரு பேட் டியில் "தமிழர் பண்பாடு, தமிழர் பண்பாடு என்கிறீர்களே. அப்படியென்றால் என்ன" என்று கேட்டார். "அதுவா? தாயை வாடி என்று சொல்ல மாட்டான் - மகளை போடி என்று சொல்ல மாட்டான் தமிழன்" என்றாரே பார்க்கலாம். இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும்  'விஜயபாரதம்!'

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner