எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகிவரும் ஜவகர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினரை வரவேற்கும் விதமாக மாணவர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி விருந்து ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதில் மாட்டிறைச்சிப் பிரியாணி மற்றும் பொரித்த மாட்டிறைச்சி வகைகள் தயாரிக்கப் பட்டன. அதன் பிறகு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு சென்ற மாதம் தீபாவளி விடுமுறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாட்டிறைச்சி விருந்து குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் மாட்டிறைச்சி சமைத்தவர்களில் மாட்டிறைச்சி வாங்கிவந்ததாகக் கூறி 3 பேர் மீதும், அதை சமைத்துக் கொடுத்ததற்காக ஒருவர் மீதும், மேலும் அனைவருக்கும் உண்ணக் கொடுத்தது என்று கூறி 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. இதில் 2 பேருக்கு 6000 ரூபாய் மேலும் இரண்டு பேருக்கு 10,000 ரூபாய் அபராதமாக பல்கலைக் கழக நிர்வாகம் விதித்தது, மேலும் உணவை வழங்கிய சிலருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து பல்கலைக் கழகத்தின் தலைமை ஒழுங்குக் கண்காணிப்பு அதிகாரி கவுஷல் குமார் கூறியதாவது:

"பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சி சமைத்துச் சாப்பிட்டது தொடர்பாக மேலி டத்தில் இருந்து நடவடிக்கை எடுக்க அறிவு றுத்தல் வந்துள்ளது.  இதனடிப்படையில் 4 மாணவர்களுக்கும் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளோம். மாட்டிறைச்சி சமைத்து உண்டது விதிமீறல் ஆகும்.  இவர்களின் நடவடிக்கை கண்டனத் திற்குரியது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது" என்று கூறினார். இனி இம்மாதிரி செயல்படக்கூடாது என்று கடும் எச்சரிக்கையுடன் 10 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தினால் மேலும் கடும் நடவடிக்கைகளிலிருந்து தப்பலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்கள் தரப்பில் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்களுக் கிடையே பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இந்த மாதிரி செய்வது வழக்கம்தான், ஜே.என்.யு போன்ற வளாகங்களில் ஒழுங்குக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் யார் மாட்டிறைச்சி சமைக்கிறார்கள், யார் சாப்பிடுகிறார்கள் என்று கண்காணிப்பதுதான் வேலையா என்று மாணவர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாரதீய ஜனதா மத்தியில் அதிகாரத்திற்கு வந்த பின்னர், இந்து ராஷ்டிரமே அமைக்கப்பட்டு விட்டது என்ற தோரணையில் இது போன்ற பிற்போக்குத்தனமான பாசிச நடவடிக்கைகள் நிர்வாணமாகத் தலை விரிகோலமாக ஆட்டம் போட ஆரம்பித்து விட்டன.

பசு பாதுகாப்பு என்பதையும் தாண்டி மாட்டுக் கறியே (ஙிமீமீயீ) சாப்பிடக் கூடாது என்கிற அளவுக்கு இந்துத்துவா சக்திகளின் வால் நீண்டு கொண்டே போகிறது.

இத்தகு நடவடிக்கைகளால்தான் டில்லி ஜவகர் லால் நேரு பல்கலைக் கழகம் உள்பட பல முக்கிய பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் தேர்தலில் பிஜேபி, ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி படுதோல்வியைச் சந்தித்து வருகின்றது.

இத்தகு நடவடிக்கைகளால்தான்  தேர்தலில் தோல்வி அடைய நேர்ந்தது என்று கூறி ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களே பிஜேபி தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் கூட நடத்தியுள்ளனர்.

மக்களுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் கொடுக்காத  பிஜேபியின் மோடி அரசு அதனைத் திசை திருப்பும்  வகை யில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து வருவது தற்கொலைக்குச் சமமானதாகும். ஏபிவிபியைத் தனிமைப்படுத்திட மற்ற மற்ற மாணவர் அமைப்புகள் ஒன்று சேரட்டும்.!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner