எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திராவிடர் கழகத் தலைவர் - ‘விடுதலை’ ஆசிரியர் -  தமிழர் தலைவர் என்று மக்களால் அறியப் பெற்ற, மதிக்கப் பெற்ற தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ‘விடுதலை’க்குச் சந்தா வழங்கும் விழா, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத் தின் பகுதியைக் கொளுத்திய (1957 நவம்பர் 26) ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு நாள் ஆகிய முப்பெரும் விழாக்கள் தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாநகரில் கடந்த 2 ஆம் தேதி வெகுநேர்த்தியுடன், எழுச்சியுடன் கொள்கை விழாவாக நடைபெற்றன.

அனேகமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலி ருந்தும், கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் குடும்பம் குடும்பமாக விழாவுக்கு வருகை தந்தது தனிச்சிறப்பே!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் விழாவில் பங்கேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டதுபோல, கொள்கையை முன் னிறுத்தி ஆக்கப்பூர்வமாக நடத்தப்பட்ட தனித்தன்மையான விழாக்கள் இவை.

அரும்பாடுபட்டு, குறையேதும் கூறப்பட முடியாத அள வுக்கு ஒவ்வொன்றையும் திட்டமிட்டுச் செயல்படுத்தி வெற்றி யின் முகட்டில் ஒளிவீசும் விழாக்களாக நடத்தியமைக்காக கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியோர் ஆவர்!

தந்தை பெரியார் பிறந்த ஊரில் கடலூரில் பிறந்த நமது தலைவருக்கு விழா என்கிறபோது, அதில் ஒரு ஈர்ப்பு இருக் கத்தான் செய்தது. கட்சிகளைக் கடந்து ஊர்  மக்கள் உவகை காட்டினர்.

அதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு. ஈரோடு என்ற ஊரை உலக வரைபடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தவர் அந்த ஈரோட்டிலே பிறந்த முழுப் புரட்சியாளர் தந்தை பெரியார் அல்லவா!

அவர் மறைந்து 44 ஆண்டுகள் பறந்துவிட்ட நிலையில், அந்த ஈரோட்டுச் சூரியனின் ஒளிக்கதிர்களை உலகெங்கும் கொண்டு சேர்த்த மிகப்பெரிய சாதனையாளர் மானமிகு வீரமணி அவர்கள்தான் என்பதை அறிந்த நிலையில், ஈரோட்டு மக்களுக்கு அந்த மகிழ்வும், பெருமையும், நன்றி உணர்வும் இருக்கத்தானே செய்யும்!

அதிகாரத்தில் இல்லாத ஒரு சமுதாயப் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த - இலட்சியத்தை மட்டுமே சுவாசித்து வலம் வந்து கொண்டு இருக்கிற கருஞ்சட்டைத் தோழர்கள், பொறுப்பாளர் கள் ‘விடுதலை’ சந்தா நிதியாக ரூ.67 லட்சத்தைத் தேனீக்கள் போல பறந்து பறந்து, பம்பரம்போல சுழன்று சுழன்று சேகரித்து, தங்கள் தலைவரிடம் அளித்து மகிழ்ந்தனர் என்றால், அது சாதாரணமானதுதானா?

தந்தை பெரியார் உழைப்பால், அவர் பெற்றுத் தந்த உரிமைகளால், பெரியார் மறைவுக்குப் பிறகும், வீரமணி அவர்களின் தலைமையிலான திராவிடர் கழகம் சமூகநீதித் தளத்திலும், வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை மீட்கும் தடத்திலும், தலைதூக்கும் மதவாதப் பாம்பின் நச்சுப் பல்லை நறுக்கும் மதச்சார்பற்ற தலைமையில், ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங் கிணைக்கும் பாங்கிலும், இவற்றை முன்னிறுத்தி மக்களைத் தயாரித்திட பிரச்சாரப் புயலாய் வீறுகொண்டு நிற்கும் வியத்தகு சாதனையிலும் திராவிடர் கழகத்தையும் தாண்டி தமிழர் தலை வராக இந்த 85 ஆம் வயதிலும் ஓயாமல் உழைக்கிறார் என்பதை நாட்டு மக்கள் அறிந்ததால்தான், கருஞ்சட்டைத் தொண்டர்கள் நன்கொடை திரட்டச் செல்லும்பொழுது, நன் முகம் காட்டி நன்கொடையை நல்குகின்றனர் என்பதுதான் உண்மை. அந்த வாய்ப்பில்தான் ஏழை, எளிய, நடுத்தரத் தொண்டர்களைத் தன்னகமாகக் கொண்ட திராவிடர் கழகத்தி னரால் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்திருக்கிறது. அந்த அறிவு நாணயமிக்கத் தொண்டர்களுக்கு நன்கொடை வழங் கிய நன்னெஞ்சங்களுக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முப்பெரும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெருமக்களும், தந்தை பெரியார் தொண்டினையும்,  அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர்தம் கொள்கையைக் கொண்டு செல்லும் நன்முயற்சிகள், திட்டங்கள் குறித்தும், இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளின் இன்றியமையாமை குறித்தும், கட்சிகளுக்கு அப்பால் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைக்கும் பாலமாக ஆசிரியர் வீரமணி அவர்கள் இருப்பது குறித்தும் ஒளிவுமறை வின்றி எடுத்துரைத்தது கழகத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்வையும், தலைநிமிர்வையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

குறிப்பாக ஜாதி ஒழிப்பு என்பதை மய்யப் புள்ளியாக வைத்து, விழா நாயகர் ஆசிரியர் முதல் அனைத்துத் தலை வர்களும் வலியுறுத்தியது இங்குச் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் இந்தத் திசையில் தெரிவித்த கருத்துகளும், கண்ட களங்களும் மிக முக்கியமானவை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் எவ்வளவோ முயன்றும்கூட ஜாதி ஒழிப்புக்கான பிரிவை சட்டத்தில் இடம்பெறச் செய்ய முடியவில்லை. அவரே மனம் நொந்துதான் ‘‘ஒரு வாடகைக் குதிரையாக்கப்பட்டேன்’’ என்று வருந்தியதுண்டு. ‘‘அந்த சட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு தனக்கு இருக்கிறது என்றாலும், அதனைத் தீயிட்டுக் கொளுத்துவதில் முதல் மனிதராக நான் இருப்பேன்’’ என்று சொன்னது எவ்வளவுப் பெரிய கருத்து!

அண்ணல் அம்பேத்கர் மாநிலங்களவையில் சொன்னதை, நடப்பில் செய்துகாட்டியவர் தந்தை பெரியாரே!

ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் முக்கிய மைல்கல் கோவில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆக உரிமை என்ப தாகும். அதற்கான போராட்டக் களத்தில்தான் தந்தை பெரியார் தம் இறுதி மூச்சைத் துறந்தார்.

அந்தப் பணியை முடிக்க நீதிமன்றத்துக்குள்ளும், வீதி மன்றத்திற்குள்ளும் நமது செயல்பாடுகள் இருக்கும் என்று விழாத் தலைவர் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் கொடுத் துள்ள பிறந்த நாள் செய்தியைச் செயல்படுத்திட கச்சை கட்டி நிற்போம் - இது ஒரு மனித உரிமைக்கான உன்னதப் போராட் டம் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner