எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் புரதப் பற்றாக்குறை பெரிதும் தலைதூக்கி ஆடத் துவங்கியுள்ளது. இந்தியாவில் அதிக ஊட்டச்சத்துக் குறைவுடன் பிறக்கும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மரணம், அய்ந்து வயது குட்பட்ட குழந்தைகள் மரணம் அதிகம் உள்ள மாநிலம் குஜராத். இந்திய சுகாதார மய்யம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடும் புள்ளி விவ ரங்களில் தப்பாமல் முதலிடம் பிடிப்பது பி.ஜே.பி. ஆளும் குஜராத் மாநிலம் தான்!  ஊட்டச்சத்து குறைபாடு இந்த மாநிலக் குழந்தைகளை ஏன் பாடாய்ப்படுத்துகிறது என்ற கேள்விக்குப் பதில் என்ன? இங்கு முட்டைகூட பொது வில் விநியோகிக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் உள் ளன. இந்துத்துவாவின் ‘கோட்டை’ என்றால் இதெல்லாம் இருந்துதானே ஆகவேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த காலம் முதல் இந்த மாநிலத்தில் முக்கிய நகரங்களில் சில பகுதிகளைத் தவிர்த்து இதர இடங்களில் இறைச்சி சாப்பிடுபவர்கள் தீண்டத்தகாதவர்களாக பார்க்கும்படி சமூக அமைப்பைக் கொடூரமாக மாற்றிவிட்டார்கள்.

ஆனால், இந்த மாநிலத்தில் அதானிக்கு தாரைவார்த்து விடப்பட்ட போர்பந்தர் மற்றும் கண்டாலா துறைமுகங் களில் அதிக அளவு இறைச்சி ஏற்றுமதியாகிறது. 2015-2016 ஆம் ஆண்டு குஜராத் துறைமுக ஏற்றுமதி புள்ளி விவரங்களின்படி 4,75,400 மெட்ரிக் டன் ஏற்றுமதியாகி யுள்ளது, இதன் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில்  ரூ.127 கோடி 70 லட்சம்  ஆகும். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் ஒட்டுமொத்த இறைச்சி ஏற்றுமதியில் 47 விழுக்காடு குஜராத் துறைமுகங்களில் இருந்து செல்கிறது.

பி.ஜே.பி. ஆளும் குஜராத்தைச் சுற்றியுள்ள மாநிலங் களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக் கப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக மாடுகள் துறை முகங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இப்படி கொண்டு செல்லப்படும் வாகனங்களில் அதானி மற்றும் சில பெருமுதலாளிகளின் நிறுவனச் சின்னங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. இந்தச் சின்னங்கள் பொறிக்கப்பட்டு செல் லும் டிரக்குகளைப் பசுப் பாதுகாவலர்கள் தொடுவ தில்லை. ஆனால், பால்பண்ணைக்குப் பசுக்களைக் கொண்டு செல்லும் இசுலாமியர்கள் மட்டுமே குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

2016 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் பாலர் பள்ளிகளிலும், அங்கன்வாடிகளிலும் முட்டை கொடுப்பது முழுமையாக தடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஒரு வாழைப்பழம், அவித்த கொண்டைக் கடலை அல்லது தளியா எனப்படும் கிச்சடிகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக ‘தைனிக் பாஸ்கர்’ என்ற பத்திரிகை ஒரு கட்டு ரையை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந் திர தினத்தன்று சிறப்புத் தொகுப்பாக வெளியிட்டிருந்தது. அதன் தலைப்பு ‘‘உணவுக்குச் சுதந்திரமா?’’ என்பது தான்.

வாழைப்பழங்கள் மொத்த கொள்முதலில் வாங்கி அங்கன்வாடிக்கு வரும் முன்பே அனைத்தும் நசுங்கி கனிந்து  பஞ்சாமிர்தம் போல் ஆகிவிடுகின்றன.  அரசு கொள்முதல் பொருள் என்றாலே அதற்குத் தரம் என்றெல் லாம் பார்க்கக் கூடாது என்பது எழுதாத விதி போலும்! குழந்தைகள் கையில் கிடைக்கும் வாழைப்பழங்கள் அனைத்தும் சாப்பிடத் தகுதியற்றவையாக இருக்கும். பொதுவாக பல்வேறு அங்கன்வாடிகளில் வாழைப்பழங் கள் அனைத்தும் அங்கு மேயும் ஆடுகளுக்கும், பால் மாடுகளுக்கும் கொடுக்கப்படுகின்றன.

அதேபோல், குழந்தைகளுக்கு வழங்கும் கிச்சடிகளின் நாற்றம் தாங்காமல் அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் புகார் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது. கிச்சடி செய்ய உடைத்து ஒன்றாகக் கலக்கப்பட்ட பல்வேறு தானியங்கள் தேவை.  ஆனால், புழுத்துப்போன பூச்சரித்துப் போன கிச்சடிகளே வழங்கப்படுகின்றன. இதனால் அங்கன்வாடிக் குழந்தைகள் அங்கு செல்வதையே தவிர்த்துவிட்டனர். அங்கன்வாடிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்; ஆகவே இவர்களுக்குக் கடைகளில் சென்று ஊட்டச்சத்தான உணவுகள் வாங்கி சாப்பிட வசதியில்லை. அங்கன்வாடியில் நசுங்கிப்போன வாழைப்பழம், கெட்ட நாற்றம் அடிக்கும் கிச்சடிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு, வீட்டில் கிடைக்கும் சப்பாத்தியும், குழம்பும்தான் ஆகாரம். இதனால் இவர்களுக்குத் தக்க வயதில் கிடைக்கவேண்டிய புரதமும், மாவுச்சத்தும் கிடைக்காமல் நோஞ்சானாகவே இருந்துவிடுகின்றனர். இவர்களுக்கு முட்டை வழங்கியதை தடைசெய்த மத்தி யப் பிரதேச அரசு உணவுக்கு எப்போது சுதந்திரம் வழங் கப்போகிறது என்றும் அந்த ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தச் செய்தி தமிழாக்கம் செய்யப்பட்டு ‘விடுதலை’யிலும் வெளிவந்தது. (20.4.2017)

சமீபத்தில் ஆயூஸ் அமைச்சரகம் வெளியிட்ட கையேட்டில், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மாமிசம், முட்டை போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று அச்சடித்து அனைத்து மாநில சுகாதார மய்யங் களுக்கும் அனுப்பியுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் அறிவு, உடல் வளர்ச்சியில்லாத மக்களை உருவாக்கும் திட்டம் உள்ளதோ என்ற அய்யம் எழுகிறது.

பி.ஜே.பி.யின் ஒவ்வொரு செயல்பாடும் நாட்டை நாசமாக்கும் கொடுஞ்செயல்களே!

ஏதோ ஓர் ஆட்சி என்ற போர்வையில் பி.ஜே.பி. ஆட் சியைப் பார்க்கக் கூடாது. உடனடியாக வெகுமக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner