எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஉத்தரப்பிரதேசத்தில் குற்ற வழக்குகள் மற்றும் அரசியல் வழக்குகளில் தொடர்புடைய 20,000 இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினரை உடனடியாக விடுவிக்கும் வகையில் புதிய சட்டமியற்றப்பட்டது.  (சிஷீனீஜீஷீsவீtவீஷீஸீ ஷீயீ ளியீயீமீஸீநீமீs ணீஸீபீ கிதீமீtனீமீஸீt ஷீயீ ஜிக்ஷீவீணீறீs)  இச்சட்டத்தின்மூலம் சாமியார் ஆதித்யநாத் மீதுள்ள வன்முறை மற்றும் மிரட்டல் தொடர்பான வழக்குகள், மத்திய அமைச்சர் சாக்ஷி மகராஜ் மீதான பாலியல், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கைவிடப் படுகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் கல்யாண் சிங் ஆட்சி காலம் முதல் பாபர் மசூதி வன்முறை, பசுமாட்டு வன்முறை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் மற்றும் அரசியல் வழக்குகளில் ஆயிரக்கணக்கான இந்து அமைப்பின் உறுப்பினர் கள், அதன் தலைவர்கள், பாஜகவைச் சேர்ந்த தொண்டர்கள் உள்பட பலர் மீது வழக்குகள் உள்ளன. இதில் உமாபாரதி, சாமியார் ஆதித்யநாத், சாக்ஷி மகராஜ், நிரஞ்சனா ஜோதி உள்ளிட்ட பல பாஜக பிரமுகர்கள் மீது உள்ள குற்றவியல் வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறும் நிலை உருவாகியுள்ளது.

‘தைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி நாளிதழ் வெளி யிட்டுள்ள செய்தியில், ‘‘அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளில் நீண்ட நாள் சிறையில் உள்ள குற்ற வாளிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்தது. இப்படி விடுதலை செய்யும் சட்டத்தில் மேலும் புதிய விதிகளைச் சேர்த்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து நிரந்தர நீக்கம் பெறும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

லக்னோவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சாமியார் ஆதித்யநாத், ‘‘முந்தைய அரசுகள் எங்கள் பிரதிநிதிகள்மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக போலியான பல வழக்குகளை தொடுத்துள்ளனர். எந்த ஒரு போதிய சான்றுகள் ஏதுமின்றி அவர்கள் மீதான வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகளின் காரணமாக அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்வே காரணம், எந்த ஒரு குற்றமும் செய்யாமல் அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆகவே இவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளேன். மேலும் சட்ட ஆலோசனைகளை உரிய சட்ட நிபுணர்களிடம் கேட்டு இச்சட்டத்திற்கு எவ்வித தடைகளும் வராமல் பார்த்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறியிருந்தார்.

இது குறித்து எதிர்கட்சித் தலைவர்கள் கடுமை யான கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற நட வடிக்கைகளில் மாநில அரசு நேரடியாக தலையிடு கிறதா? இவர்களே சட்டமியற்றி குற்றவாளிகளை விடுதலைசெய்கிறார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்கு என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக உத்தரப்பிரதேச காங்கிரசு செய்தித்தொடர்பாளர் விரேந்திர மதன் கூறும்போது,

‘‘உத்தரப்பிரதேச அரசு மிகவும் ஆபத்தான ஒரு நடவடிக்கையை கையிலெடுத்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் குற்றவாளிகள் இந்து அமைப்பு களின் பெயரால் பல குற்றங்களைச் செய்துள்ளனர். இதில் கொலை, கொள்ளை, வன்முறை தூண்டுதல், கலவரம் செய்தல் உள்ளிட்ட பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகளும் உள்ளன. ஆனால் இந்த அரசு அவர்கள் மீதான வழக்குகளை அரசியல் வழக்காக மாற்றி, அவர்களை விடுதலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயலாகும்.  இதனால் கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள் தாங்கள் செய்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இதனால் மாநிலத்தில் குற்றங்கள் அதிகரிக்கும்‘’ என்று கூறினார்.

மாநில கம்யூனிஸ்ட் தலைவர் பிரேம்நாத் ராய் உபி அரசு கொண்டுவந்த இச்சட்டம் குறித்து பேசும்போது, ‘‘இந்த அரசு புதிய சட்டங்கள் மூலம் என்ன சொல்லவருகிறது எனப் புரியவில்லை. குற்ற வாளிகளை  மதச்சாயம், அரசியல் சாயம் பூசி அவர் களை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்‘’ என்று கூறினார்.

கொடிய குற்றங்களைச் செய்பவர்களை இதுபோல் அரசியல் நோக்கத்தோடு விடுதலை செய்வது - எதிர் காலத்தில் குற்றவாளிகளைக் கொம்பு சீவி  ஏவி விடுவதில்தான் போய் முடியும். பி.ஜே.பி.யின் அராஜ கத்துக்கு எல்லையேயில்லை - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner