எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உத்தரகண்ட், மத்தியப்பிரதேசம், கருநாடகா, குஜராத், மிசோரம், அசாம், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, அருணாச்சலப்பிரதேசம், யூனியன் பிரதேசமாகிய தாத்ரா நகர் ஹவேலி  ஆகிய மாநில அரசுகள், கணவனை இழந்த பெண்கள்குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு அளிக்காத காரணத் தால் உச்சநீதிமன்றம் அவைகளுக்கு தண்டத் தொகை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப் பட்ட பொதுநல வழக்கில், 18 வயதுக்கு குறைவான பெண்களுக்குத் திருமணம் நடைபெறுவதும், அப் பெண்கள் கணவனை இழந்தால் அவர்களை குடும் பத்தினரே கைவிடுவதும் ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இப்பிரச்சினைகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான விவரங் களை அளிக்குமாறு கோரப்பட்டும் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து போதிய விவரங்கள் வரப்பெறவில்லை என்று மத்திய அரசின் அமைச்சகச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையின்போது குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்தே உச்சநீதிமன்றம் மாநிலங்களுக்கு தண்டத்தொகை விதித்து உத் தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அமர்வு மேலும் குறிப்பிடுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் ஓர் அய்ந்து நிமிடம்கூட இப் பிரச்சினை தொடர்பாக பேச முடியாத அதிகாரிகள் அளிக்கின்ற நீண்ட விவர ஆவணங்களால் மட்டும் பாலியல் நீதிக்கான பிரச்சினையில் எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை.

மத்திய அமைச்சகம் அளித்துள்ள தகவலால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். பெண்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லை. மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் பொறுப்புடன் பதில் அளிக்காமல் அலட்சியத்துடன் இருப்பது கவலை அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் செயலாளர் விரும்பியபடி, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் முழு விவரங்களையும் இன்றிலிருந்து மூன்று வாரங்களுக்குள் அளித்திட வேண்டும்.

உரிய பதிலை அளிக்காத பட்சத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செய லாளர்கள் நீதிமன்றத்தில் நேரில்  வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த ஜூலை மாதத்தில் கணவனை இழந்த பெண்கள் பிரச்சினையில் அவர்களின் மறுமணம், மறுவாழ்வு மற்றும் அவர்களின் திறன் மேம்பாடுகளின் மூலமாக அவர்களை சுதந்திரமுள்ளவர்களாக உரு வாக்குவது குறித்தும் திட்டம் வகுத்துத் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற கடமைகளில் இது ஒரு பகுதியும் மேலும் சமூக நீதிக்கானதுமாகும். பிருந்தாவன் மற்றும் ஆசிரமங்கள் அல்லது நாட்டின் எந்த ஒரு பகுதியாக இருந்தாலும், வெறுமையுடன் வாழ்நாளைக் கழிக்கும் கணவனை இழந்த பெண் களின் வாழ்வில் மீண்டும் ஒளி திரும்ப வேண்டும்.

இவ்வாறு நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. இவ் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 30.1.2018 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் சரி பகுதியானவர்கள் பெண் கள். ஆனால் அவர்களைப் பற்றிய சிந்தனையும், நடத்தப்படும் விதமும் சகிக்கப்பட முடியாதவையே!

விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலான பெண்கள், ஆட்சி அதிகாரத்திலும், நீதிபதி பதவி களிலும் அமர்ந்து விடுவதாலேயே பெண்கள் வளர்ச்சி பெற்றுவிட்டனர் என்ற முடிவுக்கு வருவதைவிட பேதமை, ஏமாற்றுத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. கணவனை இழந்த பெண்கள் கைவிடப்பட்ட பெண்கள், பற்றிய புள்ளி விவரங்களைப் பெறுவதில் கூட இவ்வளவு இடர்ப்பாடு, உச்சநீதிமன்றம் உத்தர விட்டும்கூட அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர் என்றால் அவர்கள் எண்ணத்தில் பெண்களைப் பற்றிய மதிப்பீடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இடம் சட்டமன்றங்களும், நாடாளுமன்ற மும்தான் அவர்களுக்காக 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா உறைந்த நிலையில்தான் உள்ளது. முதலில் அதற்கு உயிர் உண்டாக்கப்பட்டு, எழுந்து நடமாடச் செய்வதுதான் பெண்களின் உரிமைப் புரட்சியில் அவசர அவசியமான பணியாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner