எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய ராணுவம், சாணக்கிய நீதியின் படியும், அர்த்தசாஸ்திரத்தின் படியும் நடந்துகொள்ளவேண்டும் என்று இந்திய இராணுவத்தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியமான பதவிகளில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களையே நியமித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. சிபிஅய், தேர்தல் ஆணை யம், நீதித்துறை, பொருளாதாரம், திட்ட ஆணையம், தொழில் துறை உள்ளிட்ட பல துறைகளின் தலைமைப் பதவிகளில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் மற்றும் தீவிர ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி.  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் லாலுபிரசாத் உள்ளிட்ட பல எதிர்கட்சித் தலைவர்களும் அறிக்கை களாக வெளியிட்டுள்ளனர், ஆனால் இது குறித்து அவ்வப்போது மோடி  மேடைகளில் மறுப்பு தெரி வித்து பேசியதும் உண்டு.

ஆனால் அப்படி நியமிக்கப்பட்டவர்கள் நேரடி யாகவே தாங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் என் பதை அவ்வப்போது காட்டிக்கொண்டும் வருகின்றனர். செஞ்சோற்றுக் கடனும் இருக்கிறதல்லவா!

இந்திய ராணுவத்தின் தளபதியாக இருப்பவர் பிபின் ராவத், இவரை விதிமுறைகளை மீறி 2016-ஆம் ஆண்டு ராணுவத்தளபதியாக நியமித்தார் என்ற குற்றச்சாட்டும் மோடி மீது வலுவாக உண்டு.

காவி ஆதரவு மனநிலையைக் கொண்ட பிபின் ராவத் இந்திய ராணுவத்தை காவிமயமாக்கிவிடுவார் என்ற அச்சத்தில் நியாயம் இருக்கிறது என்பது வெளிச் சமாகவே தெரிந்து விட்டது. டில்லியில் நடைபெற்ற ராணுவ தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் பிபின் ராவத்  கூறியதாவது: ‘‘இராணுவத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மிகப்பெரிய தேவை இருக்கிறது, எதிர்காலப் போர்கள் மிகவும் நவீனமயமானதாக இருக்கும். அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும். அரசு உதவினால், தேவையான தொழில்நுட்பங்களை மிகச் சரியாகப் பயன்படுத்த முடியும். அடுத்த போரை உள்நாட்டுக் கட்டமைப்புகளுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். இராணுவத் தொழில்நுட்பம், அர்த்த சாஸ்திரம், சாணக்கிய நீதியின் அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்'' என்று இராணுவத் தளபதி பிபின் ராவத் கூறினார்.

அர்த்த சாஸ்திரமும், சாணக்கிய நீதியும், வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்று கூறுகிறது, சாணக்கியர் ஒரு படி மேலே போய் ‘‘ஏழைகளை,ஏழைகளாகவே வைத்திருக்கவேண்டும், அப்படிச்செய்தால் தான் ஆட்சியாளர்களுக்கு மக்கள் எதிரிகளாக உருவாகாமல் இருப்பர், நேர்மையான போர்முறை என்பதை ஏட்டில் மட்டுமே வைத்திருக்கவேண்டும், போர் நிறைவு ஒப்பந்தம் போட்டுவிட்டு சூழ்ச்சியால் எதிரிகளைக் கொல்லவேண்டும்'' என்று கூறுகிறார். இதனை பிபின் ராவத் ஆதரிக்கிறார் என்பது அவரது உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட மேற்கண்ட வாசகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அர்த்த சாஸ்திரம் இவற்றை மட்டுமா கூறுகிறது? அரசின் கருவூலத்திற்கு நிதி குவிய எந்தவிதமான பொய்யான தகவல்களையும், மூடநம்பிக்கைகளையும் பரப்பலாம் என்று கட்டவிழ்த்து விடப்பட்ட தக வல்கள் அர்த்த சாஸ்திரத்தில் நிறைய உண்டு; எடுத்துக்காட்டுக்கு ஒன்று.

“ஒரு மரத்தில் பிசாசு தோன்றி விட்டதாக முதலா வதாக பொது ஜனங்களிடையே பீதியை உண்டு பண்ண வேண்டும். அந்த மரத்துக்குள் ஒருவனை நுழையச் செய்து பயங்கரமான பேய்க் கூச்சல் இடும் படியாக அரசன் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த துஷ்ட தேவதையை சாந்தப்படுத்தி அனுப்பாவிட்டால் ஊருக்குப் பெருங்கேடு விளையும் என்று ஜனங்கள் நம்பி, அதைச் சாந்தப்படுத்த மக்கள் முயலும்படிச் செய்ய வேண்டும். அரசனது ஒற்றர்கள் சந்நியாசிகள் போல வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணம்  வசூலிக்க வேண்டியது!'' (“கோயில்கள் தோன் றியது - ஏன்?” - கி. வீரமணி பக்கம் 8).

இதுபோல சாணக்கியனின் பித்தலாட்டங்கள் வண்டி வண்டியாக நிறைய உண்டு இத்தகைய சாணக்கியன் பற்றி 125 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் இராணுவத் தளபதி பேசுகிறார் என்றால் - இது எத்தகைய அபாயகரமானது. இராணுவத்தை விமர்சிக்க வேண்டிய ஒரு நிலையை ஓர் அரசோ, இராணுவத் துறையோ ஏற்படுத்தலாமா? பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner