எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மராட்டிய மாநிலத்தில் பீமாகோரேகான் எனும் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும், அப் போதைய முடியாட்சியான பேஷ்வாக்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரின்போது, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட மகர் வகுப்பினர் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர். அதன்பிறகு அப்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் போர் நினைவுத் தூண் எழுப்பினார்கள். பீமாகோரேகானில் போரின்போது உயிரிழந்த தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வந்தது. பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கரும் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதனிடையே கடந்த 1.1.2018 அன்று 200ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, பீமாகோரேகானில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு மரியாதை செலுத்திய போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அந்த வன்முறைக்கலவரத்தில் தாழ்த்தப் பட்டவர் ஒருவரும் உயிரிழந்தார்.

பீமாகோரேகானில் நடைபெற்ற வன்முறை கலவரங்களுக்கு காரணமானவராக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மனோகர் என்கிற சாம்பாஜி பீடே (வயது 84) பெயரை பத்மசிறீ விருதுக்காக பாஜக அரசு பரிந்துரைத்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் சங்கிலி மாவட்டத்தில்  விநாயகர் பூஜையின்போது மிராஜ், சங்கிலி ஆகிய பகுதிகளில் வகுப்புக் கலவரம்    வெடித்தது. அப்போது அந்த வகுப்புக் கலவரத்துக்கும் காரணமானவராக  சாம்பாஜி பீடே இருந்துள்ளார். அப்போதைய   அரசும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், 2008ஆம் ஆண்டில் ஜோதா அக்பர் இந்தித் திரைப்படம் வெளியானபோது திரைப்படத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறைகளில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சாம்பாஜி பீடே இருந் துள்ளார். பின்னர் Ôஷிவ் பிரத்திஷ்தான் ஹிந்துஸ் தான்Õ எனும் பெயரில் ஓர் அமைப்பை தோற்றுவித்தார். மேற்கு மராட்டிய பகுதிகளில் இளைஞர்களிடையே மராட்டிய மன்னன் சிவாஜி குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக பரப்புரை செய்துவருகிறார்.

10 அமைச்சர்களுடன் அரசு செயலாளர் ஒருவரையும் சேர்த்து 11 பேர் கொண்ட குழு அமைக் கப்பட்டு, மாநிலத்திலிருந்து பத்மசிறீ விருதுக்கான பட்டியல் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்பட்டு வரு கிறது. விருதுக்காக விண்ணப்பிக்காதவர்களும் அப்பட்டியலில் இடம்பெறுவர். வீட்டுவசதித்துறை அமைச்சர் தலைமையிலான அக்குழு  அளித்த பரிந் துரையில் சாம்பாஜி பீடேவின் பெயருடன் 15 பேரைக் கொண்ட பட்டியல் மராட்டிய மாநில அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் பெயரனும், மராட்டிய மாநில தாழ்த்தப்பட்டவர்களின் தலைவருமாகிய பிரகாஷ் அம்பேத்கர் இதுகுறித்து கூறியதாவது:

"வன்முறைகளில் ஈடுபட்டது சம்பந்தமாக காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசும் அவரைக் கைது செய்யவில்லை. அடுத்து வந்த பட்னவிஸ் தலைமையிலான அரசாலும் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் இடம் பெற்றிருந்த போதிலும் அவரை கைது செய்ய முடியவில்லை. அதற்கான காரணம் வெளிப்படையாகத் தெரிந்ததுதான். 2008ஆம் ஆண்டு சங்கிலி கலவரத்தில் கூட உள்ளூர் காவல் துறை அவரை விடுவித்தது. பீமா கோரேகான் கலவர வழக்கில் சாம்பாஜி பீடே மற்றும் ஏக்போடே ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஷிவ் பிரதிஸ்தான் ஹிந்துஸ்தான் அமைப்பின் செயல் தலைவர் நிதின் சவ்குலே கூறியதாவது:

Òகுருஜியிடம் பத்ம விருது குறித்து கேட்ட போது, அவர் உடனடியாக ஏற்க மறுத்துவிட்டார். விருதை ஏற்பது என்பது அவருடைய கொள்கைக்கு எதிரானது என்றும், சத்ரபதி சிவாஜி மற்றும் சாம்பாஜி மகராஜ் ஆகியோரின் விருப்பங்களுக்கும் எதிரானது என்று கூறிவிட்டார். அவர் மறுத்துவிட்டபோதிலும் ,அரசு ஏன் பரிந்துரைத்தது என்று எனக்கு தெரியவில்லை’’ என்றார்.

இன்றைய பிஜேபி அரசின் சிந்தனையும், தேடுதலும், போக்கும் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே! யாருக்கெல்லாம் விருது என்ற விவஸ்தையே இல்லாது போயிற்று.

திரிபுரா மாநில மேனாள் முதல் அமைச்சர் மாணிக் சர்க்கார் சொன்னதுபோல இப்படியொரு மோசமான பிரதமரையும், கட்சியையும், ஆட்சியையும் இதற்கு முன் நான் கண்டதில்லை என்பது உண்மை! உண்மை யிலும் உண்மை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner