எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த - சுயமரியாதை வேலை செய்து வருகிறேன்.

'குடிஅரசு' 18.7.1937

மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் யார்? டி.என்.ஏ. ஆய்வு

4500 வருடங்களுக்கு முன் அரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து டி.என்.ஏ. எடுக்கப்பட்டுள்ளது. இந்த டி.என்.ஏ. முழுக்க முழுக்க தென்னிந்திய மக்களுக்கு நெருக்கமானதாக உள்ள தாக கூறப்படுகிறது.

உலகின் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்று ஹரப்பா நாகரிகம் என்று கூறப்படுகிறது. இங்கு இருந்தவர்கள் ஆரியர்களா, திராவிடர்களா என்று விவாதம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், இவர்கள் திராவிடர்கள்தான், தமிழர்கள் போன்ற தென்னிந்திய மக்கள்தான் இங்கு வசித்தவர்கள்;  ஆரியர்கள் அதற்கு பின்பே இங்கு குடியேறி இருக்க வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சி கடந்த 2015இல் அரியானா அருகே இருக்கும் ராகிகார்கி என்ற பகுதியில் நடத்தப்பட்டது. டாக்டர் வசந்த் ஷிண்டே என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் தலைமையில் மூன்றுக்கும் அதிகமான ஆண்டுகளாக அரியானா பகுதியில் இந்த சோதனை நடந்து இருக்கிறது. அங்கு உள்ள மனித எலும்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகள் 4500 வருடம் பழமை வாய்ந்தவை. இதன் மூலம்தான் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, அந்த எலும்புகளின் உட்புறம் உள்ள சிறு சிறு திசுக்களை நவீன தொழில்நுட்பம் மூலம் பிரித்து எடுத்து இருக்கிறார்கள். பின் அந்த திசுக்களின் இருந்து டி.என்.ஏ.வை எடுத்து உள்ளனர். இதன் மூலமே ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த ஆய்வின் மூலம், ஹரப்பாவில் வாழ்ந்த முதல் மனிதன், ஆரிய இனத்தைச் சேர்ந்தவர் கிடையாது. இந்த மனிதனின் உடலில் உள்ள டி.என்.ஏ. அப்படியே திராவிட இனக்குழுவின் டி.என்.ஏ.வை ஒத்து இருப்பதாக டாக்டர் வசந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஆரியர்கள் அங்கே இருந்ததற்கான ஆதாரம் துளி கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இங்கு மத வழிபாடுகள் குறைவாக இருந்துள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட எந்தப் பொருளும் வேத முறைப்படி இல்லை. எந்த இந்து கடவுள் சிலையும், வேத கால பொருட்களும் இல்லை. மேலும் எந்த பொருளிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் இல்லை என்றும்,  தென்னிந்திய எழுத்து வடிவமே இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் அதில் காணப்படும் ஜீன்கள், தற்போது இந்தியாவில் வசிப்பவர்களிடம் இருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இதுமிகவும் கவனிக்கவேண்டிய ஒன்று ஆகும். அதாவது அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாரிசுகள் இப்போதும் வாழ்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

முக்கியமாக தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியாவில் உள்ள மக்களாக அவர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் வசந்த் ஷிண்டே கூறியுள்ளார். இதுதான் இந்த ஆராய்ச் சியின் மிக முக்கியமான கட்டமாகும். இதுகுறித்த ஆதாரங்களை விரைவில் ஆய்வு கட்டுரையாக பொதுவில் வெளியிட உள்ளார். இந்த மாத இறுதியில் இது இணையத்தில் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதே சமயம், 2016இல் இந்த ஆய்வை வெளியிட இருந்ததாகவும், ஆனால் மத்திய பாஜக அரசும், தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பும் இதை வெளியிட விடவில்லை. வேதம் சார்ந்த கண்டுபிடிப்புகள் இருக்கிறதா என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள், வரலாற்றில் அவர்களுக்கு விருப்பமான சுவடுகள் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். இதனால்தான் இந்த முடிவுகளை வெளியிட இவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன.

தங்களுக்கு வசதி குறைவானது எனும் காரணத்தால் ஆரியராவது - திராவிடராவது என்று பேசக் கிளம்பியிருக்கும் படித்த பார்ப்பனக் கூட்டம் இந்த அறிவியல் ஆய்வுக்குப் பதில் கூற அவர்களிடம் எந்த சரக்குக் கைவசம் உள்ளது?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner