எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மறு உலகத்தை மறந்து வாழ்க

என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க் கையைப் பொருத்துங்கள்.

'குடிஅரசு' 3.11.1929


தஞ்சைத் தீர்மானங்கள்

அன்னையார் நூற்றாண்டு விழா

திராவிடர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் 6.10.2018 மாலை நடைபெற்றது. கூட்டத்தில் இரங்கலைச் சேர்ந்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட உலக நாத்திக தலைவர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் உட்பட பல தரப்பினரின் மறைவுக்கும், தன்னலம் துறந்து தந்தை பெரியார் பணி முடிக்க தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த ஒப்பாரும், மிக்காரும் இல்லாத கருஞ்சட்டைத் தோழர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கடலூர் பொதுக்குழுவுக்குப் பின் இந்த ஓராண்டுக் காலத்தில் எண்ணற்ற கழகத்தினர் மறைவு நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

இலட்சியத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத இத்தகைய தொண்டர்களை வரலாற்றில் எங்குத் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட்டார்கள். எங்கள் கழகத் தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிடுகிறார் என்றால் சாதாரணமா?

இந்த இரங்கல் தீர்மானத்தைத் தொடர்ந்து இரண்டாவது தீர்மானத்தைக் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களே முன் மொழிந்தார்.

இதிலிருந்தே அந்த இரண்டாவது தீர்மானத்தின் மாட்சிமை எத்தகையது என்பது சொல்லாமலே விளங்கும்.

அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்த தீர்மானம் அது.

"சுயமரியாதை, ஈகம், துணிவு, தொண்டறம் இவற்றின் ஒட்டுமொத்த வடிவமும், தந்தை பெரியார்தம் பெரும்பணி நடைபெறுவதற்காக அவரைப் பேணிப் பாதுகாக்கும் அருந்தொண்டினை ஆற்றுவதற்காகத் தன் வாழ்வினை முழுவதுமாக ஒப்படைத்தவரும், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு இயக்கத்தைக் கட்டிக்காத்தவரும், நெருக்கடி நிலை எனும் நெருப்பாற்றை நீந்திக் கரை சேர்ந்தவரும், தந்தை பெரியார் முதலாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி ‘இராவண லீலா’ நடத்தி, இந்தியத் துணைக் கண்டத்தையே அதிரச் செய்தவரும், தனக்காக தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துக் களைக்கூட தனி அறக்கட்டளையாக்கி கல்வி சமூகப் பணியாற்றிட அதனை முழுவதும் ஒப்படைத்தவரும், உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கி சீரிய முறையில் நடத்திக் காட்டிய ஒரே தலைவருமான அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டுப் பெருவிழாவை 2019 மார்ச்சு 10ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்துப் பகுதிகளிலும் சீரும் சிறப்புமாக புகழ் பூத்த பெருவிழாவாக கொண்டாடுவது என்றும், குறிப்பாக  சென் னையில் முழு நாள் நிகழ்ச்சியாக பல்வேறு அம்சங்களுடன் நடத்துவது என்றும், நூற்றாண்டு நிறைவு விழாவை 2020 மார்ச்சு 10ஆம் தேதி அன்னை மணியம்மையார் பிறந்த வேலூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா திட்டங்கள்

1. அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் எழுத்துக்கள் - பேச்சுகள்  - முழுத்தொகுப்பு

2. தனியே நூற்றாண்டு சிறப்பு மலர்

3. நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியீடு

4. மாவட்டத் தலைநகரங்களில் “பெண்ணுரிமை- ஒரு தொடர் பயணம்” கருத்தரங்குகள்- பரப்புரைகள்

5. 1 கோடி மூல நிதி திரட்டல் - குறைந்தபட்சம்

6. திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அன்னை  ஈ.வெ.ரா.மணியம்மையார் சிலை

7. தனியே ஒரு கல்வி, சுகாதார, பகுத்தறிவு, சமூகநீதி - பாலியல் நீதி - மூடநம்பிகை ஒழிப்பு நோக்கங்களைக் கொண்ட அறக்கட்டளை

8. விதவைகளுக்குப் பூச்சூட்டு விழா, விதவைகளை திருமணங் களுக்குத் தலைமை தாங்க வைத்தல், உடற்கொடை, உறுப்புக்கொடை வழங்கல், மகளிர் தொண்டறத் தோழர்கள் - “ம.தொ.தோ.”, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - பேய் பிசாசு - பாலின வக்கிரமங்கள்  - ஒழுக்கக் கேடு முதலியவற்றை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்

9. மாவட்ட அளவில் ஆங்காங்கே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துதல். பெரியார் பிஞ்சுகளுக்கு ஓவியப் போட்டி நடத்துதல்"

கழகத் தலைவர் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டது போல இத்தீர்மானம் தன்னிலை விளக்கம் கொண்டதாகும்.

60 வயது நிறைவதற்கு முன்பாகவே அன்னையார் அவர்கள் மறைவுற்றது தமிழ்நாட்டுக்கும், இயக்கத்துக்கும் கெட்ட வாய்ப்பாகும்.

தந்தை பெரியார் உடல் நலனைக் கண்ணும் கருத்துமாக இருந்து, செவிலித் தாயாக இருந்து ஒவ்வொரு நொடியும் கண்ணிமையாகக் காத்த அந்த அன்னை தன் உடல் நலனைப் பார்த்துக் கொள்வதில் அலட்சியம் காட்டி விட்டாரே என்று நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் கனக்கிறது.

அவர்களால் மேடையில் பேச முடியும் - எழுதவும் முடியும். ஆனால், அவற்றை எல்லாமே அய்யாவிடம் ஒப்படைத்து, அய்யாவைப் பேச வைத்தார், அய்யாவை எழுத வைத்தார். அதிலே அவர் கண்ட கடமை  இன்பமே பெரிது - பெரிது!

தந்தை பெரியார் மேடையில் பேசிக் கொண்டு இருப்பார் புத்தகக் கடையை விரித்து இயக்க நூல்களை விற்றுக் கொண்டிருப்பார்.

தந்தை பெரியார்தான் எளிமையின் சின்னம் என்றால், அவர்களிடம் போட்டிப் போடும் அளவுக்கு எளிமையின் வடிவம் நம் அன்னை! தந்தை பெரியார் பாதுகாப்பு என்பது அவர்களின் கைகளில் பத்திரமாக இருந்தது என்றாலும், தந்தை பெரியார் கவனிக்கக் கருத்துச் செலுத்தாத பல்வேறு துறைகள் அவர்களைச் சுற்றியே சுழன்றன. அவைதான் கல்வி நிறுவனங்கள், கைவிடப்பட்ட குழந்தைகளை எடுத்துப் புகலிடம் தரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் மற்றும் நிருவாகப் பணிகள், இவற்றையும் தம் மேல் போட்டுக் கொண்டு அயராமல், ஓய்வில்லாமல் உழைத்த உன்னதத் தாய் நம் அன்னை.

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை நாகம்மையார் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள். பிறந்து சில நாள்களே உள்ள குழந்தைகளை தாய் இல்லாமல், தாய்ப்பால் இல்லாமல் பராமரிப்பது எத்தகைய பத்தியமான கடுமையான பணி.

ஆனால் அந்த அன்னையார் பெற்ற குழந்தைகளை உதறி விட்டுச் சென்றாலும் தாம் பெறாத அந்தப் பச்சிளம் சிசுக்களை வாரி மார்போடு மார்பாக அரவணைத்து சீராட்டி - பாராட்டி வளர்த்த இந்த அன்னையாரின் உள்ளம் யாருக்கு வரும்?

அப்படி எடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளின் முன்னொட்டு (மிஸீவீtவீணீறீ) என்ன தெரியுமா? ஈ.வெ.ரா.ம. (ணிக்ஷிஸிவி) - தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் பெயர்களே இந்தக் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குக் கிடைத்தது  போன்று உலகில் யாருக்குத்தான் கிடைக்கும்?

உலகில் வேறு எங்காவது இதுபோன்ற தலைவர்களும், அமைப்புகளும், நடப்புகளும் இருந்ததாக வரலாறு உண்டா? கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா?

ஆனால் இந்த நாடு ஆரியத்தின் கைப் பிடியில் உள்ளது. ஊடகங்கள் பார்ப்பனீயத்தின் கைப்பிள்ளைகள். அதனால் இவை எல்லாம் இருட்டடிக்கப்பட்டன. இப்படி ஒரு தாய் பார்ப்பனர்களுக்குக் கிடைத்திருந்தால் அவரை உலகச் சித்திரமாக்கி விருதுகளைக் குவிக்கச் செய்திருப்பார்கள்.

ஆனால் இது ஒரு தொண்டற இயக்கம் - அதன் தந்தை பெரியார் என்றால், தாய் மணியம்மையார். அவர்களின் நூற்றாண்டு விழாவை வரும் மார்ச்சு முதல் கொண்டாடுவோம். அவர்களைப்பற்றிய முழு தகவல்களையும், தொண்டற உள்ளத்தையும், பொதுத்தொண்டின் சீலத்தையும் பட்டிதொட்டி எல்லாம் பரப்புவோம்!

என்னைப் பெறாத அன்னை என்று நமது தலைவர் குறிப்பிட்டாரே - அந்த ஆசிரியர் தலைமையில் அன்னையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராவோம்! தயாராவோம்!!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner